ராதாகிருஷ்ண விகே பாட்டீலுக்கு மந்திரி பதவி அளித்தது தவறான முன் உதாரணம் அஜித் பவார் ஆவேசம்
ராதாகிருஷ்ண விகே பாட்டீலுக்கு மந்திரி பதவி அளித்ததுதவறான முன் உதாரணம் எனஅஜித் பவார் ஆவேசமாக கூறியுள்ளார்.
மும்பை,
ராதாகிருஷ்ண விகே பாட்டீலுக்கு மந்திரி பதவி அளித்ததுதவறான முன் உதாரணம் என அஜித் பவார் ஆவேசமாக கூறியுள்ளார்.
மந்திரி பதவி
முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த மந்திரி சபை விஸ்தரிப்பின் போது ராதாகிருஷ்ண விகே பாட்டீலுக்கு கேபினட் மந்திரி பதவி அளிக்கப்பட்டது.
இது காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜனநாயக விரோதம்
இது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் அஜித்பவார் கூறியதாவது:-
எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்த உடன் ராதாகிருஷ்ண விகே பாட்டீலுக்கு மந்திரி பதவி அளித்தது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தி உள்ளார். இது ஜனநாயக விரோதம் மற்றும் நெறி தவறிய செயல்.
இவ்வாறு ஆவேசமாக அவர் கூறினார்.
இது குறித்து மராட்டிய காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் கூறுகையில், ‘‘ராதாகிருஷ்ண விகே பாட்டீலுக்கு மந்திரி பதவி அளித்தது சட்டவிரோத செயல் அல்ல, ஆனால் பழம்பெருமை வாய்ந்த ஜனநாயகத்துக்கு எதிரானது’’ என்றார்.
Related Tags :
Next Story