திருவொற்றியூரில் பழுதான சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்


திருவொற்றியூரில் பழுதான சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 19 Jun 2019 3:54 AM IST (Updated: 19 Jun 2019 3:54 AM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூரில் பழுதடைந்த சாலையை சீரமைத்து தரக்கோரி அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவொற்றியூர்,

திருவொற்றியூரில் 7-வது வார்டுக்குட்பட்ட பெரியார் நகரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் பழுதாகி உள்ளது. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலைத்தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.

இதனால் பழுதடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மண்டல அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று பெரியார் நகர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த திருவொற்றியூர் மண்டல அதிகாரிகள் மற்றும் மணலி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணகி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களை சமாதானம் செய்தனர்.

அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story