வானவில் : வெண்ணெய் எடுக்கும் கருவி
கடைகளில் வாங்கப்படும் நெய்யை விட வீட்டில் வெண்ணெய் எடுத்து காய்ச்சப்படும் நெய்யின் மனதிற்கும் சுவைக்கும் ஈடு இணையே இல்லை.
அந்த காலத்தில் மத்தை வைத்து தயிரை கடைந்து அதிலிருந்து வெண்ணெய் எடுப்பது வழக்கம். இந்த அவசர யுகத்தில் அது போன்று செய்வதற்கு யாருக்கும் பொறுமை இருப்பதில்லை. பாலில் இருந்து வெண்ணெய்யை எடுப்பதற்காகவே ஒரு சிறிய கடையும் கருவியை தயாரித்து உள்ளது கில்னர் நிறுவனம்.
ஐரோப்பிய நாடுகளில் கிச்சன் பொருட்கள் தயாரிப்பில் பல தலைமுறைகளாக பெயர் பெற்ற கில்னர் நிறுவனம் இந்த எளிய கருவியை உருவாக்கிஉள்ளது. ஆடையுடன் கூடிய பாலையோ, தயிரையோ இந்த கடையும் பாட்டிலில் வைத்து கைப்பிடியை சுற்றினால் பத்து நிமிடத்தில் வெண்ணை பந்து போல திரண்டு வந்து விடும்.
பழமையான முறையில் சற்றே புதுமையை புகுத்தியுள்ளனர். தரமான கண்ணாடி பாட்டில், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பிளேடுகள் ஆகியவை இருப்பதால் நீடித்து உழைக்கும். இதன் விலை சுமார் ரூ.3000.
Related Tags :
Next Story