வானவில் : சைகைகளை புரிந்து கொள்ளும் ‘வெல்லே’
மாறி வரும் இன்றைய உலகின் கண்டுபிடிப்புகள் பலவும் நம்முடைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி வருகின்றன. இது எப்படி சாத்தியமாகிறது என்று நம்மை அதிசயிக்கவும் வைக்கின்றன.
வெல்லே ( WELLE ) எனப்படும் இந்த சிறிய உபகரணம் நமது விரல் நுனியில் பல விஷயங்களை சாதிக்க முடியும் என்று நிரூபித்துள்ளது.
கை அசைவுகளை கொண்டு இயங்கும் இன்றைய சைகை கருவிகளைப் ( GESTURE CONTROLS ) போலவே இதுவும் இயங்குகிறது. இதனைக் கொண்டு வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி, ஜன்னல் ஷேடுகள், ஸ்பீக்கர், மின்சார விளக்குகள் என்று அனைத்தையும் இயக்க முடியும். இந்த கருவியின் முன்பாக நமது கைகளை வைத்து திசைகள், எழுத்துக்கள் ஆகியவற்றையும் சுழற்சி முறையில் சில அசைவுகளையும் செய்தால் இது புரிந்து கொள்கிறது. இந்த கருவியின் பயன்கள் எண்ணற்றது. காபி மேக்கரை இயக்கி காபி போட்டு தருவதில் இருந்து உட்கார்ந்த இடத்தில் இசையமைப்பது வரை அனைத்தையும் இதன் மூலம் செய்யலாம்.
வெல்லே கருவி சோனார் தொழில்நுட்பத்தின் மூலம் இயங்குகிறது. சோனார் என்பது சிக்னல்களை கடத்தி மீண்டும் அந்த ஆற்றலை தன்னகத்தே சேர்த்து கொள்ளும் ஒரு அறிவியல் நுட்பமாகும். இந்த கருவியை தரையில் வைத்து சைகைகளை வரைந்து காட்டினாலும் அது செயல்படுகிறது. வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனியே ரிமோட் வைத்துக் கொண்டு கஷ்டப்படத் தேவையில்லை.
அத்தனையையும் ஒரே சாதனத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்பதை வெல்லே கருவியின் நிறுவனர்கள் பெருமையுடன் தெரிவிக்கின்றனர்.
Related Tags :
Next Story