வானவில் : பற்களை பளிச்சிட வைக்கும் ஸ்மார்ட் டூத்பிரஷ்


வானவில் : பற்களை பளிச்சிட வைக்கும் ஸ்மார்ட் டூத்பிரஷ்
x
தினத்தந்தி 19 Jun 2019 4:52 PM IST (Updated: 19 Jun 2019 4:52 PM IST)
t-max-icont-min-icon

வருங்கால ஸ்மார்ட் யுகத்தில், காலையில் பல் துலக்குவதே ஸ்மார்ட் டூத் பிரஷ் கொண்டு தான் செய்யவேண்டும் என்று ஆகிவிடுமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

உலகின் முதல் மின்சாரம் இல்லாத ஸ்மார்ட் டூத் பிரஷை அறிமுகப்படுத்தியுள்ளனர் குட் வெல் நிறுவனத்தினர். பேட்டரி இன்றி இயங்கும் பி( BE ) எனப்படும் இந்த டூத் பிரஷ் மறுசுழற்சி செய்யக் கூடிய பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பிரஷின் பின்புறமிருக்கும் பகுதியை சுற்றினால், அதன் மூலம் ஏற்படும் இயக்க ஆற்றலை சேமித்துக் கொள்கிறது. ஒவ்வொரு முறை சுழற்றும் போதும் 80,000 கீற்றுகளை ( STROKES ) வெளியிடுகிறது.

முன்புறமிருக்கும் சுற்றும் பகுதி நமது பற்களின் மூலை முடுக்குகளை கூட விட்டு வைக்காமல் பளிச்சென்று சுத்தம் செய்கிறது.

இதன் முனையில் இருக்கும் நார்களில் கரி இருப்பதால் வாய் துர்நாற்றம் ஏற்படாமல் பாதுகாப்பதோடு, கிருமிகளையும் அழிக்கிறது. ஆறு அவுன்ஸ் எடையுடன், ஆறு அங்குல நீளத்துடன் இருக்கும் இந்த டூத் பிரஷ் உறையுடன் வருகிறது. சாதாரண பிரஷ்களை போல அடிக்கடி இதனை மாற்ற வேண்டியதில்லை. தலை பகுதியை மட்டும் அவ்வப்போது மாற்றி உபயோகித்துக் கொள்ளலாம்.

Next Story