வானவில் : சாம்சங்கின் 8 கே கியூலெட் டி.வி.


வானவில் : சாம்சங்கின் 8 கே கியூலெட் டி.வி.
x
தினத்தந்தி 19 Jun 2019 5:57 PM IST (Updated: 19 Jun 2019 5:57 PM IST)
t-max-icont-min-icon

மின்னணு பொருள் உற்பத்தியில் முன்னணியில் திகழும் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் உலகிலேயே முதலாவது 8 கே கியூலெட் டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது.

அனைத்து அதிநவீன தொழில்நுட்பங்களையும் உள்ளடக்கிய டி.வி.யாக தற்போதைக்கு இதுவே உள்ளது என்று நிறுவனம் பெருமைபட தெரிவித்துள்ளது.

மொத்தம் 3 மாடல்களில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 75 அங்குல மாடல் டி.வி.யின் விலை ரூ.10,99,900 ஆகும். அதாவது ரூ.11 லட்சத்துக்கு 100 ரூபாய் குறைவு. அடுத்த மாடல் 82 அங்குலமாகும். இதன் விலை ரூ.16,99,900 ஆகும். பிரீமியம் மாடல் 92 அங்குல மாகும். இதன் விலை ரூ.59,99,900 ஆகும்.

பிரீமியம் மாடல் மட்டும் ஆர்டரின் பேரில் மட்டுமே தயாரித்துத் தரப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. சொகுசு பங்களாக்களுக்கு ஏற்ற வகையில் இவை தயாரிக்கப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 8 கே மாடலில் குவான்டம் பிராசஸர் உள்ளது. இதனால் ஹெச்.டி.எம்.ஐ. போர்ட், யு.எஸ்.பி. அல்லது செட்டாப் பாக்ஸ் இதில் எதன் மூலமாக படம் பார்த்தாலும் அதன் ஒளிபரப்பு தன்மை மாறுபட்டாலும் இந்த டி.வி. 8 கே ரெசல்யூஷனைத் தரும். தற்போதைக்கு 8 கே ரெசல்யூஷனுக்கு எந்த நிகழ்ச்சிகளும் தயாரிக்கப்படுவதில்லை. இருப்பினும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை இதில் பார்க்கும்போது 8 கே ரெசல்யூஷனில் தெரியும் வகையில் இதன் ஒளிபரப்பு சிறப்பாக இருக்கும். காணும் படங்களின் ஒளி அளவு, கேட்கும் ஒலி அளவு ஆகியன மிகச் சிறப்பாக இதன் மூலம் வெளிப்படும்.

இந்த டி.வி.யின் செயல்பாடுகளை வீடுகளில் உள்ளவர்கள் குரல் வழி உத்தரவு மூலம் கட்டுப்படுத்த முடியும். இதில் பிக்ஸ்பி 2.0 மற்றும் கூகுள் அசிஸ்டென்ட் ஆகியன உள்ளன. இதில் ஆப்பிள் ஏர் பிளே 2 வசதியும் உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் ஆப்பிள் ஐ போன் மூலம் தாங்கள் காண விரும்பும் படங்களை, காட்சிகளை இதில் காணமுடியும்.

இந்த டி.வி.யின் மற்றொரு சிறப்பம்சம் இதை சுவரில் பதிக்க முடியும், அதாவது நோ கேப் வால் மவுன்ட் என்ற நுட்பம் உள்ளது. இதனால் உங்கள் வீட்டின் உள்புற அழகை சற்றும் பாதிக்காத வகையில் இந்த டி.வி.யை நிறுவ முடியும் என்பது கூடுதல் சிறப்பாகும். இந்த டி.வி.யில் 33 மில்லியன் பிக்ஸெலில் காட்சிகள் தெரியும்.

இது 4 கே டி.வி.யில் தெரியும் காட்சிகளை விட 4 மடங்கு அதிகமாகும். அதேசமயம் புல் ஹெச்.டி. டி.வி.யில் காட்சிகளைப் பார்ப்பதை விட 16 மடங்கு துல்லியமாகத் தெரியும் என்பதுதான் இதில் உள்ள விசேஷமாகும். டி.வி. பார்ப்பதில் புதிய அனுபவத்தை கியூலெட் டி.வி. நிச்சயம் தரும் என்பது உறுதி.

Next Story