வானவில் : இன்பினிக்ஸ் ஹாட் 7 புரோ


வானவில் : இன்பினிக்ஸ் ஹாட் 7 புரோ
x
தினத்தந்தி 19 Jun 2019 6:01 PM IST (Updated: 19 Jun 2019 6:01 PM IST)
t-max-icont-min-icon

கடந்த வாரம் அறிமுகமான ஸ்மார்ட்போன்களில் இன்பினிக்ஸ் ஹாட் 7 புரோ மாடலும் ஒன்று.

இன்பினிக்ஸ் ஹாட் 7 புரோ 6.19 அங்குல தொடு திரையுடன் வந்துள்ளது. ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்துடன் 4,000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் இது வந்துள்ளது. இதன் பின்பகுதியில் 13 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. இரண்டாவது கேமரா 2 மெகா பிக்ஸெல்லைக் கொண்ட இதில் 64 ஜி.பி. நினைவகம் உள்ளது. மைக்ரோ எஸ்.டி. கார்டு மூலம் இதன் நினைவகத் திறனை 256 ஜி.பி. வரை நீட்டித்துக் கொள்ள முடியும்.

இரட்டை சிம் கார்டு போடும் வசதி கொண்டது. வை-பை, ஜி.பி.எஸ்., புளூடூத் வி 5.0, யு.எஸ்.பி. ஓ.டி.ஜி., மைக்ரோ யு.எஸ்.பி. ஆகிய வசதிகள் உள்ளது. இத்துடன் ஆக்ஸிலரோமீட்டர், லைட் சென்ஸார், கம்பாஸ், மாக்னெட்டோமீட்டர், பிராக்ஸிமிடி சென்சார், கைரேகை சென்சார் ஆகியன உள்ளது. இதில் பேஸ் லாக் வசதியும் உள்ளது. இதன் எடை 160 கிராம் மட்டுமே. மிட்நைட் பிளாக் மற்றும் அக்வா புளூ ஆகிய வண்ணங்களில் இது கிடைக்கிறது. செல்பி பிரியர்களுக்காக இதன் முன்புற கேமராவும் 13 மெகா பிக்ஸெல்லைக் கொண்டிருப்பது சிறப்பம்சமாகும். இதன் விலை ரூ.7,999.

Next Story