பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறலாம் கலெக்டர் பிரபாகர் தகவல்


பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறலாம் கலெக்டர் பிரபாகர் தகவல்
x
தினத்தந்தி 20 Jun 2019 3:45 AM IST (Updated: 19 Jun 2019 10:15 PM IST)
t-max-icont-min-icon

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் சேர்ந்து விவசாயிகள் பயன்பெறலாம் என கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

கிரு‌‌ஷ்ணகிரி, 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ. 6 ஆயிரம் வீதம் நிதி உதவியானது, 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2 ஆயிரம் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக இத்திட்டம் தற்போது அனைத்து விவசாயிகளுக்கும் அதாவது, சிறு, குறு, நடுத்தரம் மற்றும் பெரிய விவசாயிகளும் பயன்படும் வகையில் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. எனவே, உயர் வருவாய் பிரிவினர், நிறுவனத்தின் பெயரில் நிலம் உள்ளவர்கள் உள்ளிட்ட விலக்களிக்கப்பட்ட இனங்கள் தவிர்த்து, தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் சேர, சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பம் அளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் வாரிசு அடிப்படையில் பட்டா மாறுதல் செய்து கொள்ளும் வாரிசுதாரர்களும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இதுவரை நிலமானது, இறந்த தாய் அல்லது தந்தை பெயரில் இருந்தால் அதற்குரிய வாரிசுதாரர் கிராம அளவில் நடைபெறும் சிறப்பு முகாமில் சம்பந்தப்பட்ட பகுதியின் கிராம நிர்வாக அலுவலரை அணுகி, உரிய முறையில் விண்ணப்பம் அளித்து வாரிசு அடிப்படையில் பட்டா மாறுதல் செய்து, அதன் அடிப்படையில் இந்த பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாரக்ள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story