கர்நாடகத்தில் பா.ஜனதாவுக்கு புதிதாக 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்படுவார்கள் எடியூரப்பா தகவல்


கர்நாடகத்தில் பா.ஜனதாவுக்கு புதிதாக 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்படுவார்கள் எடியூரப்பா தகவல்
x
தினத்தந்தி 20 Jun 2019 4:00 AM IST (Updated: 20 Jun 2019 12:31 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் பா.ஜனதாவுக்கு புதிதாக 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று எடியூரப்பா கூறினார்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் பா.ஜனதாவுக்கு புதிதாக 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று எடியூரப்பா கூறினார்.

கலந்துரையாடல்

புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து பா.ஜனதா தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா, அனைத்து மாநில தலைவர்கள் மற்றும் மேலிட பொறுப்பாளர்களுடன் டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடல் நடத்தினார். இதில் ஜே.பி.நட்டா பேசியதாவது:-

நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கட்சி உறுப்பினர் சேர்க்கையை தீவிரமாக நடத்த வேண்டும். உறுப்பினர்கள் குறைவாக உள்ள பகுதிகளில் இதற்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். கட்சியை மேலும் பலப்படுத்த வேண்டும்.

இவ்வாறு ஜே.பி.நட்டா கூறினார்.

50 லட்சம் உறுப்பினர்கள்

இதில் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் சிவராஜ்சிங் சவுகான், “உறுப்பினர் சேர்க்கை முகாம் பணிகளை தலைவர்கள் ஒரு வாரம் கவனிக்க வேண்டும். இந்த பணியில் அனைவரும் தீவிரமாக பங்கேற்க வேண்டும். பா.ஜனதா ஆட்சி இல்லாத மாநிலங்களிலும் உறுப்பினர் சேர்க்கைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இந்த உறுப்பினர் சேர்க்கை முகாம் ஜூலை 6-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி வரை நடக்கிறது” என்றார்.

இந்த கூட்டத்தில் பேசிய கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா, “கர்நாடகத்தில் கடந்த முறை நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் 80 லட்சம் பேர் சேர்க்கப்பட்டனர். இந்த முறை புதிதாக 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்படுவார்கள். இந்த இலக்கை அடைய கட்சியின் தொழில்நுட்ப பிரிவு தீவிரமாக பணியாற்றும்” என்றார்.

Next Story