இந்து முன்னணி நிர்வாகிக்கு கொலை மிரட்டல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்


இந்து முன்னணி நிர்வாகிக்கு கொலை மிரட்டல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்
x
தினத்தந்தி 20 Jun 2019 4:00 AM IST (Updated: 20 Jun 2019 1:21 AM IST)
t-max-icont-min-icon

இந்து முன்னணியின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் வடிவேல், இந்து முன்னணி நிர்வாகிகளுடன் சென்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் மனு கொடுத்தார்.

புதுக்கோட்டை,

இந்து முன்னணியின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் வடிவேல், இந்து முன்னணி நிர்வாகிகளுடன் சென்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், வழிபாட்டு தலங்களில் இருக்கும் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதை சுப்ரீம் கோர்ட்டு தடை செய்துள்ளது. ஆனால், குறிப்பிட்ட மத வழிபாட்டு தலங்களில் அவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இதை தடுக்க வேண்டி கடந்த 17-ந்தேதி புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தேன். இதனால் சம்பந்தப்பட்ட மதத்தை சேர்ந்தவர்கள் பல செல்போன் எண்களில் இருந்து பேசி, என்னை தகாத வார்த்தைகளில் திட்டியதுடன், கொலை மிரட்டலும் விடுத்து வருகின்றனர். எனவே எனக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எனக்கும், எனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

Next Story