பெரிய காஞ்சீபுரத்தில் மனைவியை பிரிந்த ஏக்கத்தில் மெக்கானிக் தற்கொலை


பெரிய காஞ்சீபுரத்தில் மனைவியை பிரிந்த ஏக்கத்தில் மெக்கானிக் தற்கொலை
x
தினத்தந்தி 20 Jun 2019 4:15 AM IST (Updated: 20 Jun 2019 1:50 AM IST)
t-max-icont-min-icon

பெரிய காஞ்சீபுரத்தில் மனைவியை பிரிந்த ஏக்கத்தில் மெக்கானிக் தற்கொலை செய்துகொண்டார்.

காஞ்சீபுரம்,

பெரிய காஞ்சீபுரம் அருட்பெருஞ்செல்வி தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 48). ஏ.சி. மெக்கானிக். இவர் 8 வருடங்களாக தன்னுடைய மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வெங்கடேசன் அடிக்கடி மது குடித்துவிட்டு மனஉளைச்சலில் இருந்து வந்தார். மனைவியை பிரிந்த ஏக்கத்தில் இருந்த வெங்கடேசன் மதுவில் வி‌ஷத்தை கலந்து குடித்தார்.

மயங்கி விழுந்த அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். டாக்டர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


Next Story