ஈரோட்டில் தனியார் லாட்ஜில் மாமூல் கேட்டு மிரட்டிய நிருபர் கைது
ஈரோட்டில் தனியார் லாட்ஜில் மாமூல் கேட்டு மிரட்டிய நிருபரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு,
ஈரோடு சூரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 47). இவர் ஈரோடு -சத்தி ரோட்டில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒருவர் லாட்ஜுக்கு வந்து குமாரிடம், `தான் ஒரு மாத பத்திரிகையின் நிருபர் என்றும், இந்த லாட்ஜில் விபசாரம் நடந்து வருவதாக தகவல் வந்துள்ளதாகவும், இதை பத்திரிகையில் வெளியிடாமல் இருக்க தனக்கு மாதம் மாதம் ரூ.5 ஆயிரம் மாமூல் கொடுக்க வேண்டும் என்றும'் கூறி உள்ளார்.
அதற்கு குமார், `இங்கு சட்டத்திற்கு புறம்பாக எதுவும் நடக்கவில்லை' என்று கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து அந்த நபர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
இந்த நிலையில் மீண்டும் அந்த நபர் நேற்று லாட்ஜுக்கு வந்து குமாரிடம், உங்களுடைய லாட்ஜில் விபசாரம் நடப்பதாக நான் பணியாற்றும் பத்திரிகையில் செய்தி வெளி வந்து இருக்கிறது. எனவே மீண்டும் செய்தி வராமல் இருக்க ரூ.40 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டி உள்ளார். மேலும் பணத்தை தரவில்லை என்றால் கொலை செய்து விடுவதாகவும் அந்த நபர் குமாரை மிரட்டி உள்ளார்.
இதுபற்றி குமார் ஈரோடு டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பதும், அவர் ஒரு பிரபலம் இல்லாத மாத பத்திரிகையின் நிருபர் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர்.

Related Tags :
Next Story