மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நூதன போராட்டம்
ராஜபாளையத்தில் நடைபெற்று வரும் பாதாளசாக்கடை, கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்களால் பொதுமக்கள் சிரமப்படுவதால் அவற்றை சமப்படுத்திட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம்,
பாதாள சாக்கடை மற்றும் கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்காக நகர் முழுவதும் தெருக்களின் நடுவே பள்ளம் தோண்டப்பட்டு குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் மேம்பாலம் கட்டப்பட்டு வருவதால் போக்குவரத்தும் அடிக்கடி மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் மாற்றம் செய்யப்படும் சாலைகள் மராமத்து இல்லாமல் இருப்பதால் வாகன ஓட்டிகளும், குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படாமல் இருப்பதால் பொது மக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி அவதிப்பட்டு வருகின்றனர்.
பல இடங்களில் பள்ளங்கள் இருப்பதால், சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து காயம் ஏற்படுவது வழக்கமாகி விட்டது. எனவே இதனை கண்டித்தும், பள்ளங்களை சரியாக மூடக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.நகராட்சி அலுவலகம் எதிரே நகர் செயலாளர் மாரியப்பன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தை மாவட்டக்குழு உறுப்பினர் கணேசன் தொடங்கி வைத்து பேசினார். போராட்டத்தில் கலந்து கொண்ட சிலர் கால், தலை மற்றும் கைகளில் ரத்தக்காயம் ஏற்பட்டு இருப்பது போலவும் கட்டு போட்டபடி சித்தரித்து கண்டன கோஷமிட்டனர்.
Related Tags :
Next Story