தூத்துக்குடியில் பாலியல் புகாரில் சிக்கிய மருத்துவக்கல்லூரி உதவி பேராசிரியர் பணியில் இருந்து விடுவிப்பு
தூத்துக்குடியில் பாலியல் புகார் கூறப்பட்ட மருத்துவக்கல்லூரி உதவி பேராசிரியர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த ஒரு டாக்டர் மீது, அந்த துறையில் பணியாற்றி வந்த சில பெண் பயிற்சி டாக்டர்கள் புகார் தெரிவித்தனர். அவர்கள், தங்களிடம் அந்த டாக்டர் பாலியல் ரீதியாக தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவதாக கல்லூரி டீனுக்கு பெயர் குறிப்பிடாமல் புகார் கடிதம் அனுப்பினர்.
இதைத்தொடர்ந்து கல்லூரி டீன் பாலசுப்பிரமணியன் உத்தரவின்பேரில், டாக்டர் லலிதா தலைமையில் 3 பேர் குழுவினர் இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தினர். பின்னர் விசாரணை அறிக்கையை மருத்துவக்கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அந்த உதவி பேராசிரியர் அந்த பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளார்.
டீன் விளக்கம்
இதுகுறித்து தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி டீன் பாலசுப்பிரமணியன் கூறும்போது, ‘மருத்துவக்கல்லூரி டாக்டர் மீதான புகார் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில் அந்த டாக்டரை மருத்துவக்கல்லூரி பேராசிரியர் பணியில் இருந்து விடுவிக்க மருத்துவக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டது. அதன்பேரில், அவர் மருத்துவக்கல்லூரி உதவி பேராசிரியர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, மருத்துவத்துறைக்கு மாற்றப்பட்டு உள்ளார். இனிமேல் அவர் பேராசிரியராக பணியாற்ற முடியாது’ என்று கூறினார்.

Related Tags :
Next Story