அடுத்த மாதத்தில் பட்ஜெட் தாக்கல் - நாராயணசாமி தகவல்
அடுத்த மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி,
புதுவை காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தியின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை பட்ஜெட் தொடர்பாக துறைதோறும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக நிதி ஆதார பெருக்கம், அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம், நலிந்த நிறுவனங்களை புனரமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சாலை, குடிநீர், அத்தியாவசிய வசதிகள் செய்து கொடுக்க நிதி ஒதுக்கீடு குறித்து பேசப்பட்டது. அதுமட்டுமின்றி இலவச அரிசி, முதியோர், விதவை, மாற்று திறனாளிகளுக்கான ஓய்வூதிய திட்டம், சென்டாக் மாணவர்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
வேலைவாய்ப்பினை பெருக்கிட அரசு துறைவாரியாக உள்ள காலி பணியிடங்களை நிரப்ப பதவி உயர்வு தொடர்பாக கோப்புகளை தயாரிக்க கூறி உள்ளேன். விரைவில் 400 காவலர்கள், ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். திட்டங்களுக்கு மத்திய அரசிடமிருந்து நிதியைப் பெற கலந்தாலோசித்து உள்ளோம்.
இன்னும் உள்ளாட்சித்துறை, சட்டத்துறை சம்பந்தமாக ஆலோசிக்க வேண்டி உள்ளது. அதன்பின் கவர்னர் தலைமையில் கலந்து ஆலோசித்து உள்துறை, நிதித்துறை அமைச்சகத்தின் ஒப்புதலை பெற்று அடுத்த மாதம் (ஜூலை) பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், ‘ராகுல்காந்தி பிறந்தநாளில் அவர் காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து வழிநடத்த வேண்டிக்கொண்டோம். நாடாளுமன்ற தேர்தலில் 11 கோடி மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து உள்ளனர். தொடர்ந்து மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க நடவடிக்கை எடுப்போம். தமிழக எம்.பி.க்கள் தமிழில் பதவியேற்றது பாராட்டுக்குரியது. அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் எங்கும் ஒலிக்கவேண்டும்’ என்றார்.

Related Tags :
Next Story