மனநலம் பாதித்த பெண்ணை கற்பழித்த சமூக ஆர்வலர் கைது கையும், களவுமாக சிக்கினார்


மனநலம் பாதித்த பெண்ணை கற்பழித்த சமூக ஆர்வலர் கைது கையும், களவுமாக சிக்கினார்
x
தினத்தந்தி 20 Jun 2019 4:45 AM IST (Updated: 20 Jun 2019 3:57 AM IST)
t-max-icont-min-icon

மனநலம் பாதித்த பெண்ணை கற்பழித்த சமூக ஆர்வலர் கையும், களவுமாக போலீசாரிடம் பிடிபட்டார்.

வசாய்,

மனநலம் பாதித்த பெண்ணை கற்பழித்த சமூக ஆர்வலர் கையும், களவுமாக போலீசாரிடம் பிடிபட்டார்.

கற்பழிப்பு

பால்கர் மாவட்டம் விரார் சந்த் நகரில் உள்ள ஒரு மேம்பாலத்தின் கீழே வைத்து வாலிபர் ஒருவர் ஒரு பெண்ணை கற்பழித்தார். அந்த வழியாக வந்த ஒருவர் இதை கவனித்து உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த வாலிபரை கையும், களவுமாக பிடித்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணையும் மீட்டனர்.

விசாரணையில், பிடிபட்ட வாலிபர் நாலச்சோப்ரா கிழக்கு விநாயக் நகரை சேர்ந்த பிரவீன் சதானந்த் ஜாதவ் (வயது35) என்பதும், சமூக ஆர்வலர் என்பதும் தெரியவந்தது.

கைது

அவர் கற்பழித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் கண்டறியப்பட்டது. 43 வயதான அந்த பெண் விராரில் சாலையில் சுற்றிக் கொண்டிருந்துள்ளார். இதை பிரவீன் சதானந்த் ஜாதவ் கவனித்துள்ளார்.

இதையடுத்து அவர் அந்த பெண்ணை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி வந்து பாலத்துக்கு கீழ் வைத்து கற்பழித்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவர் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story