மாவட்ட செய்திகள்

நில அளவை சான்று வழங்க லஞ்சம்: அதிர்ச்சியில், விவசாயி சாவு திருவிடைமருதூர் அருகே பரிதாபம் + "||" + Bribe to provide proof of land size: In shock, the farmer's death is awful near Tiruvidaimarudur

நில அளவை சான்று வழங்க லஞ்சம்: அதிர்ச்சியில், விவசாயி சாவு திருவிடைமருதூர் அருகே பரிதாபம்

நில அளவை சான்று வழங்க லஞ்சம்: அதிர்ச்சியில், விவசாயி சாவு திருவிடைமருதூர் அருகே பரிதாபம்
திருவிடைமருதூர் அருகே நில அளவை சான்று வழங்க லஞ்சம் கேட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.
திருவிடைமருதூர்,

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள வேப்பத்தூர் தட்டார தெருவை சேர்ந்தவர் தனசேகர்(வயது 48). விவசாயியான இவர், கியாஸ் வெல்டிங் தொழிலும் செய்து வந்தார். தனக்கு சொந்தமான இடத்தில் இவர் வீடு கட்ட முடிவு செய்தார். இதற்காக நிலத்தை அளக்க கிராம நிர்வாக அதிகாரியிடம் மனு அளித்தார்.


இதையடுத்து கிராம நிர்வாக அதிகாரி, சர்வேயர், கிராம உதவியாளர்கள் உள்ளிட்டோர் தனசேகருக்கு சொந்தமான இடத்துக்கு நேற்று சென்று நிலத்தை அளந்தனர். பின்னர் தனசேகரை கிராம நிர்வாக அலுவலகத்துக்கு வரும்படி அழைத்து சென்ற அதிகாரிகள், நில அளவை சான்று வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் தரும்படி கேட்டதாக கூறப்படுகிறது.

அப்போது தன்னிடம் ரூ.6 ஆயிரம் மட்டுமே இருப்பதாக கூறிய தனசேகர், பணத்தை கொடுத்தபோது மீதம் உள்ள ரூ.4 ஆயிரத்தை தந்தால் தான் நில அளவை சான்று வழங்குவோம் என அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது.

இதனால் சான்று கிடைக்காதோ? என்ற அதிர்ச்சியில் தனசேகருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, கிராம நிர்வாக அலுவலகத்திலேயே சுருண்டு விழுந்தார். இதை பார்த்து பதறிப்போன அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தனசேகரை உடனடியாக திருவிடைமருதூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மருத்துவமனையில் டாக்டர்கள் பரிசோதித்தபோது தனசேகர் இறந்து விட்டது தெரியவந்தது.

இதுபற்றி அவருடைய மகன் சுதர்சன் திருவிடைமருதூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனசேகரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதிகாரிகள் லஞ்சம் கேட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியில் விவசாயி இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வீட்டில் இருந்து பணிக்கு புறப்பட்டபோது பெண் போலீஸ் ஏட்டு மயங்கி விழுந்து சாவு
கோவையில் வீட்டில் இருந்து பணிக்கு புறப்பட்டபோது மயங்கி விழுந்து பெண் போலீஸ் ஏட்டு பரிதாபமாக இறந்தார்.
2. கோபி அருகே பரிதாபம்: மின்சாரம் தாக்கி பாலிடெக்னிக் மாணவர் சாவு
கோபி அருகே மின்சாரம் தாக்கி பாலிடெக்னிக் மாணவர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
3. ஆடு மேய்க்க சென்ற விவசாயி வெட்டிக்கொலை
ஓசூர் அருகே ஆடு மேய்க்க சென்ற விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
4. விபத்தில் சிக்கியவர்களை மீட்க சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர் டிராக்டர் மோதி சாவு
பரமத்தி வேலூர் அருகே, விபத்தில் சிக்கியவர்களை மீட்க சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர் டிராக்டர் மோதி பரிதாபமாக இறந்தார்.
5. வாணாபுரம் அருகே, பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த பிளஸ்-2 மாணவர் மயங்கி விழுந்து சாவு
வாணாபுரம் அருகே பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த பிளஸ்-2 மாணவர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். பள்ளி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.