தூத்துக்குடி மாவட்டத்துக்கு 62 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
தூத்துக்குடி மாவட்டத்துக்கு 62 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்துக்கு 62 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இடமாற்றம்
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் பணியாற்றிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாற்றம் செய்யப்பட்டனர். தற்போது மீண்டும், அவர்கள் பழைய மாவட்டங்களிலேயே பணியாற்ற விருப்பம் தெரிவித்து உள்ளனர்.
அதன்பேரில் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தூத்துக்குடி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டு உள்ளனர். தற்போது மொத்தம் 62 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
கோவில்பட்டி
அதன்படி பாவூர்சத்திரம் மாணிக்கராஜ் சூரங்குடிக்கும், பத்தமடை கார்த்திகேயன் நாசரேத்துக்கும், அச்சன்புதூர் சதீஷ் குலசேகரன்பட்டினத்துக்கும், தென்காசி மகராஜா தட்டப்பாறைக்கும், சீதபற்பநல்லூர் சரவணன் ஆறுமுகநேரிக்கும், வீரவநல்லூர் முருகபெருமாள் ஸ்ரீவைகுண்டத்துக்கும், சுத்தமல்லி இசக்கிராஜா கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்துக்கும், ஊத்துமலை அப்பாத்துரை மாவட்ட குற்றப்பிரிவுக்கும், சீதபற்பநல்லூர் முத்துசாமி காடல்குடிக்கும், பாப்பாக்குடி செல்லத்துரை குளத்தூருக்கும், புளியங்குடி குருசந்திரவடிவேல் கொப்பம்பட்டிக்கும், சொக்கம்பட்டி முத்துராஜா புதுக்கோட்டைக்கும், வாசுதேவநல்லூர் சந்திரமூர்த்தி சிப்காட்டுக்கும், சேர்ந்தமரம் உத்திரகுமார் தட்டார்மடத்துக்கும்,
சின்னகோவிலான்குளம் சதீஷ் நாராயணன் முறப்பநாட்டுக்கும், வி.கே.புதூர் சுந்தரம் தூத்துக்குடி வடக்கு போலீஸ் நிலையத்துக்கும், புளியங்குடி முத்துகிருஷ்ணன் ஆத்தூருக்கும், சுரண்டை முத்துகணேஷ் சிப்காட்டுக்கும், ஊத்துமலை முத்துமாலை புதியம்புத்தூருக்கும், மானூர் சேட்டைநாதன் கடம்பூருக்கும், மூலக்கரைப்பட்டி ஊர்க்காவலபெருமாள் தூத்துக்குடி மத்தியபாகத்துக்கும், கூடங்குளம் செந்தில்வேல்முருகன் திருச்செந்தூருக்கும், முன்னீர்பள்ளம் ரவிக்குமார் தூத்துக்குடி வடபாகத்துக்கும், நாங்குநேரி ஞானராஜன் தூத்துக்குடி தென்பாகத்துக்கும், செங்கோட்டை சங்கர் திருச்செந்தூர் கோவில் போலீஸ் நிலையத்துக்கும், குற்றாலம் ராஜாமணி தூத்துக்குடி தென்பாகத்துக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.
தென்பாகம்
இதேபோன்று அம்பை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மகேசுவரி தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், தென்காசி தாமரைசெல்வி தாளமுத்துநகருக்கும், முன்னீர்பள்ளம் காந்திமதி தூத்துக்குடி தென்பாகத்துக்கும், சுரண்டை அங்குத்தாய் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்துக்கும், சங்கரன்கோவில் நகரம் முத்துமாரி புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய பஞ்சவர்ணம் கடம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் செல்லையா மாவட்ட குற்றப்பிரிவுக்கும், மார்த்தாண்டம் ஹென்சன் பவுல்ராஜ் தூத்துக்குடி தென்பாகத்துக்கும்,
திருவட்டார் சத்யா கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்துக்கும், தாழையூத்து அனிதா ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், நாங்குநேரி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சத்தியபாமா சாத்தான்குளத்துக்கும், சேரன்மாதேவி பச்சமால் மெஞ்ஞானபுரத்துக்கும், குருவிகுளம் பொன்ராஜ் எப்போதும்வென்றானுக்கும், எஸ்.வி.கரை பாலகிருஷ்ணன் சாத்தான்குளத்துக்கும், சாத்தான்குளம் சிலுவை அந்தோணி செய்துங்கநல்லூருக்கும், தாளமுத்துநகர் செல்வன் புளியம்பட்டிக்கும், ஆலங்குளம் மகராஜன் திருச்செந்தூர் தாலுகா போலீஸ் நிலையத்துக்கும், நெல்லை நெடுஞ்சாலை போக்குவரத்து முத்துசாமி சங்கரலிங்கபுரத்துக்கும், சிவகங்கை செல்வம் ஏரலுக்கும், புளியம்பட்டி ரமேஷ் நாரைக்கிணறுக்கும், தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய அங்காளேசுவரி விளாத்திகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும் மாற்றப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர் உத்தரவின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா பிறப்பித்து உள்ளார்.
Related Tags :
Next Story