பொம்மிடியில் நிதி நிறுவனத்தில் ரூ.46 லட்சம் கொள்ளை வழக்கில் பெண் உள்பட 4 பேர் கைது


பொம்மிடியில் நிதி நிறுவனத்தில் ரூ.46 லட்சம் கொள்ளை வழக்கில் பெண் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 21 Jun 2019 4:30 AM IST (Updated: 21 Jun 2019 12:40 AM IST)
t-max-icont-min-icon

பொம்மிடியில் நிதி நிறுவனத்தில் ரூ.46 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பொம்மிடி, 

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தர்மபுரி மாவட்டம் பொம்மிடியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த மாதம் 6-ந்தேதி பூட்டை உடைத்து ரூ.46 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இதில் துப்பு துலக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த கொள்ளை தொடர்பாக தர்மபுரி அருகே மான்காரன்கொட்டாயை சேர்ந்த டிரைவர் செந்தில் (வயது 25), சோளக்கொட்டாயை சேர்ந்த இளவரசன் (27), சேலம் சாமிநாயக்கன்பட்டி சின்னதம்பி (25), சேலம் பூலாம்பட்டி சரவணன் மனைவி சுமதி (33) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.12 லட்சத்தை போலீசார் மீட்டனர். ஒரு காரும், மோட்டார்சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

சுமதியின் கணவர் சரவணன் மற்றொரு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சரவணனுக்கு இந்த கொள்ளை வழக்கில் தொடர்பு இருப்பதாகவும், அவரை காவலில் எடுத்து விசாரித்தால் கொள்ளை பற்றிய முழு விவரமும் தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Next Story