வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலைஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தூத்துக்குடி,
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலைஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
101 டிகிரி
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக கடுமையான வெயில் அடித்தது. 100 டிகிரிக்கு அதிகமாக வெயில் அடித்ததால் மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளானார்கள். நேற்று காலை முதல் பலத்த காற்று வீசியது. ஆனாலும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. நேற்று 101 டிகிரி வெயில் அடித்தது.
காற்றழுத்த தாழ்வு நிலை
நேற்று மாலையில் காற்றின் வேகம் சற்று அதிகமாக இருந்தது. அதேபோன்று வங்கக்கடலில் இருந்து குளிர்ந்த காற்று வீசத்தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், தற்போதைய காற்றின் தன்மையை பொறுத்து காற்றழுத்த தாழ்வுநிலை உருவாவது குறித்த விவரம் தெரியவரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story