ராஜாக்கமங்கலம் அருகே இளம்பெண் தற்கொலை கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு
ராஜாக்கமங்கலம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராஜாக்கமங்கலம்,
ராஜாக்கமங்கலம் அருகே உள்ள ராஜாக்கமங்கலம் துறையை சேர்ந்தவர் மரிய சந்திர ஜார்ஜ் (வயது 33), மீனவர். இவர், தாய்மாமா ஆபிரகாமின் மகள் சகாய நித்யாவை (23). 1¾ ஆண்டுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கைக்குழந்தை உள்ளது.
இந்தநிலையில் சகாய நித்யா, கணவரை தனிக்குடித்தனம் நடத்த வருமாறு அழைத்துள்ளதாகவும், ஆனால் அதை ஏற்க மரிய சந்திர ஜார்ஜ் மறுத்ததாகவும், இதனால் கணவன் மனைவி இடையே தகராறு நடந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு சகாய நித்யா தூங்க சென்றார். காலையில் எழுந்து பார்த்த போது அவர் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி ஆபிரகாம் ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதில் மகள் சாவுக்கு மரிய சந்திர ஜார்ஜ், அவருடைய தாயார் பாவுலால், அக்காள் மரிய சந்திர தெரசா ஆகியோரே காரணம் என்று குறிப்பிட்டு இருந்தார். அதன்பேரில் மரிய சந்திர ஜார்ஜ் உள்பட 3 பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுபற்றி கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் விசாரணை நடத்தி வருகிறார். சகாய நித்யா தற்கொலை குறித்து நாகர்கோவில் உதவி கலெக்டர் விஷ்ணு சந்திரன் விசாரணை நடத்துகிறார்.

Related Tags :
Next Story