மும்பையில் ஆட்டோ, டாக்சி கட்டணம் விரைவில் உயருகிறது


மும்பையில் ஆட்டோ, டாக்சி கட்டணம் விரைவில் உயருகிறது
x
தினத்தந்தி 21 Jun 2019 4:30 AM IST (Updated: 21 Jun 2019 5:43 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் விரைவில் ஆட்டோ, டாக்சி கட்டணம் உயர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மும்பை,

மும்பையில் விரைவில் ஆட்டோ, டாக்சி கட்டணம் உயர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

டிரைவர்கள் கோரிக்கை

மும்பையில் மின்சார ரெயில், பெஸ்ட் பஸ்களுக்கு அடுத்தப்படியாக ஆட்டோ, டாக்சிகளை தான் மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதில் மும்பை மாநகரில் மட்டும் 2 லட்சத்து 12 ஆயிரத்து 691 ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 44 ஆயிரத்து 566 டாக்சிகள் இயங்கி வருகின்றன.

தற்போது மும்பையில் ஆட்டோவுக்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.18-ம், டாக்சிக்கு ரூ.22-ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஆட்டோ, டாக்சி கட்டணத்தை உயர்த்த வேண்டும் என டிரைவா்கள் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதில் அவர்கள் கட்டண உயர்வை வலியுறுத்தி அடுத்த மாதம் (ஜூலை) 9-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

கட்டணம் உயர்வு

இந்தநிலையில் ஆட்டோ, டாக்சி கட்டண நிர்ணயம் குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.சி. காத்வா தலைமையிலான கமிட்டி ஆய்வு செய்தது. இந்த கமிட்டி கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தங்கள் அறிக்கையை தாக்கல் செய்து இருந்தது. அந்த அறிக்கை மற்றும் பெட்ரோல், டீசல், விபத்து காப்பீடு கட்டண உயர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு டாக்சி, ஆட்டோ கட்டணத்தை உயர்த்த மாநில அரசு முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன்படி ஆட்டோவுக்கான குறைந்தப்பட்ச கட்டணம் ரூ.20-ஆகவும், டாக்சிக்கு ரூ.26-ம் நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த கட்டண உயர்வு விரைவில் அமலுக்கு வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதேநேரத்தில் நீண்ட தூர (8 கி.மீ.க்கு மேல்) பயணத்துக்கான கட்டணம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story