சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை குமாரசாமி பேட்டி


சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை குமாரசாமி பேட்டி
x
தினத்தந்தி 21 Jun 2019 11:00 PM GMT (Updated: 21 Jun 2019 5:12 PM GMT)

கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.

நானே முதல்-மந்திரி

கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வரும் என்று தேவேகவுடா கூறினார். இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முதல்-மந்திரி குமாரசாமி பதிலளித்துள்ளார். சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று அவர் கூறினார்.

இதுகுறித்து அவர் யாதகிரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வராது. அதற்கு வாய்ப்பே இல்லை. இந்த கூட்டணி அரசு 5 ஆண்டுகளை பூர்த்தி செய்யும். நானே முதல்-மந்திரியாக இருப்பேன். இந்த அரசு பாதுகாப்பாக உள்ளது. கூட்டணி அரசை கவிழ்க்கும் எதிர்க்கட்சியின் முயற்சி தோல்வி அடைந்துவிட்டது.

உள்ளாட்சி தேர்தல்

சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வரும் என்று தேவேகவுடா எந்த அர்த்தத்தில் கூறினார் என்பது எனக்கு தெரியாது. அதுபற்றி நான் கருத்து கூற மாட்டேன். உள்ளாட்சி தேர்தல் வரவுள்ளது. அதை மனதில் கொண்டு தேவேகவுடா அவ்வாறு கூறியிருப்பார். தேவேகவுடாவின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Next Story