சுற்றுலாத்துறை சார்பில் மாமல்லபுரத்தில் யோகாசன பயிற்சி


சுற்றுலாத்துறை சார்பில் மாமல்லபுரத்தில் யோகாசன பயிற்சி
x
தினத்தந்தி 21 Jun 2019 10:00 PM GMT (Updated: 2019-06-21T23:14:49+05:30)

மத்திய, மாநில சுற்றுலாத்துறை சார்பில் கடற்கரை கோவில் வளாகத்தில் உள்ள புல்வெளி மைதானத்தில் யோகாசன பயிற்சி முகாம் நடந்தது.

மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் உலக யோகா தினத்தையொட்டி மத்திய, மாநில சுற்றுலாத்துறை சார்பில் கடற்கரை கோவில் வளாகத்தில் உள்ள புல்வெளி மைதானத்தில் யோகாசன பயிற்சி முகாம் நடந்தது. இதற்கு மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் எஸ்.சக்திவேல் தலைமை தாங்கினார். இந்த யோகாசன பயிற்சியில் மாமல்லபுரம் சுற்றுலா வழிகாட்டிகள், உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பல்வேறு ஆசனங்கள் செய்து அசத்தினர்.

சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச அளவில் தலைசிறந்த யோகாசன பயிற்சியாளர்கள் இந்த யோகாசன பயிற்சியை அளித்தனர்.

Next Story