தேன்கனிக்கோட்டை பகுதியில் 2 நாட்களில் 19 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல் போலீசார் தகவல்


தேன்கனிக்கோட்டை பகுதியில் 2 நாட்களில் 19 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல் போலீசார் தகவல்
x
தினத்தந்தி 21 Jun 2019 11:00 PM GMT (Updated: 21 Jun 2019 6:49 PM GMT)

தேன்கனிக்கோட்டை பகுதியில் கடந்த 2 நாட்களில் 19 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

தேன்கனிக்கோட்டை,

இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது:-


கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் சிலர் உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன், ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி ஆகியோர் மேற்பார்வையில் தேன்கனிக்கோட்டை இன்ஸ்பெக்டர் சரவணன், மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் மற்றும் போலீசார் கடந்த 2 நாட்களாக தேன்கனிக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும், சட்ட விரோதமாக நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தால் அதனை போலீசாரிடம் ஒப்படைக்குமாறு தண்டோரா போட்டு பொதுமக்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்தநிலையில் போலீசாரின் சோதனையில் கடந்த 2 நாட்களில் மட்டும் 19 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி ஏணிபண்டா கிராமத்தில் 3 நாட்டுத்துப்பாக்கிகளும், வீரிசெட்டி ஏரி கிராமத்தில் 7 நாட்டுத்துப்பாக்கிளும், ஏணிசமுத்திரம் கிராமத்தில் 9 நாட்டுத்துப்பாக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story