மாவட்டத்தில், அனுமதி இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்தால் கடும் நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை


மாவட்டத்தில், அனுமதி இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்தால் கடும் நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
x
தினத்தந்தி 22 Jun 2019 3:45 AM IST (Updated: 22 Jun 2019 12:32 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் நாட்டு துப்பாக்கிகளை வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாமக்கல், 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறயிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், எருமப்பட்டி, கொல்லிமலை, ராசிபுரம் மற்றும் மலை சார்ந்த பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது விவசாய பயிர்களை விலங்குகளிடம் இருந்து காப்பதற்கும், மலைப்பகுதிகளில் வேட்டையாடவும் உரிமம் பெறாமல் கள்ளத்தனமாக நாட்டு துப்பாக்கிகளை வைத்திருக்க வாய்ப்பு உள்ளது. இது சட்ட விரோதமாகும்.

எனவே அறியாமையின் காரணமாக கள்ளத்தனமாக நாட்டு துப்பாக்கி வைத்திருப்போர் தங்கள் வசம் உள்ள கள்ளத்துப்பாக்கியை ரகசிய இடத்தில் வைத்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட தனிப்பிரிவிற்கோ தகவல் தெரிவித்தால், காவல் துறையினர் அதை கைப்பற்றி உரிய முறையில் பறிமுதல் செய்வார்கள்.

காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் அதை தனிநபரிடத்தில் இருந்து கைப்பற்றினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். யாராவது கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தால் 94981 01020 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.

இதுபற்றிய ரகசியம் பாதுகாக்கப்படும். இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு அருளரசு கூறி உள்ளார்.

Next Story