திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் முதுகலை விலங்கியல் துறையில் மாணவர் சேர்க்கை
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் முதுகலை விலங்கியல் துறையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் முதுகலை விலங்கியல் துறையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
முதுகலை விலங்கியல் துறை
திருச்செந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற ஏழை மாணவர்கள் படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காக, தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரால் கடந்த 1965-ம் ஆண்டு திருச்செந்தூரில் ஆதித்தனார் கல்லூரி தொடங்கப்பட்டு சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி தேசிய தர மதிப்பீட்டு குழுவால் ஆராயப்பட்டு ‘ஏ’ தரச்சான்றிதழ் பெற்றுள்ளது. கல்லூரியில் முதுகலை விலங்கியல் துறை கடந்த 2011-ம் ஆண்டு சுயநிதி பிரிவாக தொடங்கப்பட்டு, எம்.பில். விலங்கியல் பாடப்பிரிவும் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த துறை அனைத்து வசதிகளுடன் இருபாலரும் படிக்கும் வகையில், தகுதியான பேராசிரியர்களுடன் செயல்பட்டு வருகிறது. மேலும் இத்துறையில் அனைத்து பேராசிரியர்களும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டம் வழிகாட்டியாளர்களாகவும் உள்ளனர். முதுகலை விலங்கியல் பாடப்பிரிவு தொடங்கப்பட்டது முதல் ஆண்டுதோறும் மாணவ- மாணவிகள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம் பிடித்து வருகின்றனர். இதுவரை 3 மாணவர்கள் தங்க பதக்கங்களும், 8 மாணவர்கள் பல்கலைக்கழக தர வரிசை பட்டியலிலும் இடம் பிடித்து உள்ளனர்.
மாணவர் சேர்க்கை
தற்போது 2019-2020-ம் ஆண்டுக்கான எம்.எஸ்சி. விலங்கியல் பாடப்பிரிவுக்கு மாணவ-மாணவிகள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. எம்.பில். பாடப்பிரிவுக்கு பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு அவசியமாகும். நுழைவுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் கல்லூரியில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். எம்.எஸ்சி. பாடப்பிரிவுக்கு இளங்கலை (பி.எஸ்சி.) விலங்கியல், 6-வது பருவ மதிப்பெண் பட்டியலுடன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்களுக்கு கல்லூரி அலுவலகத்தை நேரிலோ அல்லது 04639-220625, 220632 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை, திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி முதல்வர் மகேந்திரன் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story