செவிலியர் பதவிக்கான போட்டி தேர்வை 9,494 பேர் எழுதுகிறார்கள் 16 மையங்களில் நாளை நடக்கிறது


செவிலியர் பதவிக்கான போட்டி தேர்வை 9,494 பேர் எழுதுகிறார்கள் 16 மையங்களில் நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 22 Jun 2019 3:00 AM IST (Updated: 22 Jun 2019 1:29 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் செவிலியர் பதவிக்கான போட்டி தேர்வை 9 ஆயிரத்து 494 பேர் எழுதுகிறார்கள். தேர்வு 16 மையங்களில் நடக்கிறது.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் செவிலியர் பதவிக்கான போட்டி தேர்வை 9 ஆயிரத்து 494 பேர் எழுதுகிறார்கள். தேர்வு 16 மையங்களில் நடக்கிறது.

இது குறித்து நெல்லை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

ெசவிலியர் பதவிக்கான தேர்வு

தமிழ்நாடு மருத்துவ தேர்வு வாரியத்தால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) செவிலியர் பதவிக்கான போட்டி தேர்வு நடைபெற உள்ளது. நெல்லை மாவட்டத்தில் பேட்டை ம.தி.தா.இந்து கல்லூரி, பழைய பேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, சீதபற்பநல்லூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி.

பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரி, மேலத்திடியூர் பி.எஸ்.என். பொறியியல் கல்லூரி, தருவை எப்.எக்ஸ் பாலிடெக்னிக் கல்லூரி, அரியகுளம் சாரதா மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, சாராதா கல்லூரி, பெருமாள்புரம் சாராள் தக்கர் மகளிர் கல்லூரி, கொங்கன்தான்பாறை ரோஸ்மேரி கலைக்கல்லூரி, பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி, நெல்லை அரசு பொறியியல் கல்லூரி, மேலத்திடியூர் பி.எஸ்.என்.பாலிடெக்னிக், பி.எஸ்.என். அறிவியல் தொழில் நுட்ப கல்லூரி, மேலப்பாளையம் அன்னை ஹஜிரா மகளிர் கல்லூரி ஆகிய 16 மையங்களில் நடக்கிறது.

9,494 பேர் எழுதுகிறார்கள்

இந்த தேர்வை 9,494 பேர் எழுதுகிறார்கள். தேர்வை கண்காணிக்க தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் நிலையில் 9 சுற்றுக்குழு அலுவலர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் 3 உதவி கலெக்டர் நிலையில் பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது.

தேர்வை கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தேர்வு நாளன்று தடையில்லா மின்சாரம், தேர்வு மையத்துக்கு சீராக பஸ்கள் இயக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தேர்வு மையம் அருகே மருத்துவ குழுக்கள் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

தேர்வு எழுதுபவர்களுக்கு பேனா உள்ளிட்ட எழுத்து பொருட்கள் வழங்கப்படும். மின்னஞ்சல் முகவரி மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட அனுமதி சீட்டில் சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் ஒட்டி கொண்டு வர வேண்டும். அதனை ேதர்வு கூடத்தில் முதன்மை கண்காணிப்பாளர் முன்பாக மட்டுமே கையொப்பம் போட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story