குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவு
திருப்பூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை போக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி உத்தவிட்டுள்ளார்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் வினியோகம் மற்றும் குடிநீர் திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 265 கிராம ஊராட்சிகளில் பொது மக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதை உறுதி செய்வதுடன், குடிநீர் திட்ட பணிகள் குறித்தும் அனைத்து துறை அலுவலர்களுடன் தொடர்ந்து ஆய்வு கூட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கூடுதலாக தண்ணீர் தேவைப்படும் பகுதிகளுக்கு துறை சார்ந்த அதிகாரிகள் நேரடியாக சென்று கள ஆய்வுகள் மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவது குறித்து அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து சரியான முறையில் திட்டமிட்டு குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
நீர் உள்ள இடங்களை கண்டறிந்து தேவையான இடங்களில் புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைப்பதற்கும், பழுதடைந்த ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் மின் இணைப்புகளை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது மக்களின் அடிப்படை தேவையான குடிநீர் தொடர்ந்து வழங்கும் வகையில், குடிநீர் திட்ட பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். குடிநீர் பிரச்சினைகள் ஏதாவது இருந்தால் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டணமில்லா இலவச தொலைபேசி எண்ணான 1800-425-7023 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த பணியை மேற்கொள்ள சுழற்சி முறையில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கொங்கல்நகரம் ஊராட்சி அண்ணாநகர் ஆதிதிராவிடர் காலனியில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் சுமார் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட தொட்டி மற்றும் ரூ.2 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பில் குடிநீர் குழாய் மேம்பாட்டு பணிகளையும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார். மேலும், அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் குடிநீர் பிரச்சினை குறித்தும் கேட்டறிந்தார்.
பிரச்சினைகளை விரைந்து தீர்க்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், உதவி இயக்குனர்கள் பாலசுப்பிரமணியன்(ஊராட்சிகள்), அகமது (தணிக்கை), குடிமங்கலம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சுப்பிரமணியன், பியூலா எப்சிபாய் உள்ளிட்ட தொடர்புடைய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story