தனித்தனி சம்பவம்: 2 பெண்களிடம் 7 பவுன் நகை பறிப்பு


தனித்தனி சம்பவம்: 2 பெண்களிடம் 7 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 21 Jun 2019 10:15 PM GMT (Updated: 2019-06-22T03:33:20+05:30)

சிவகாசியில் தனித்தனி சம்பவங்களில் 2 பெண்களிடம் 7 பவுன் நகை பறிக்கப்பட்டுள்ளது.

சிவகாசி,

சிவகாசி சாட்சியாபுரத்தை சேர்ந்த ராம்குமார் மனைவி ஜீவிதா (வயது 32). இவர் தனது இரு சக்கர வாகனத்தில் சிவகாசி தாலுகா அலுவலகம் அருகில் வந்து கொண்டிருந்த போது பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள் ஜீவிதா கழுத்தில் கிடந்த 2 1/2 பவுன் நகையை பறித்துக்கொண்டு ஓடிவிட்டனர்.

இது குறித்து ஜீவிதா சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார் அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதே போல் சிவகாசி ரத்னா காலனியை சேர்ந்த மரியதங்கம் (32) என்பவர் இரு சக்கர வாகனத்தில் தனது வீட்டின் அருகில் வந்து கொண்டிருந்த போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள் மரியதங்கம் கழுத்தில் கிடந்த 43/4 பவுன் தங்கநகையை பறித்துக்கொண்டு ஓடிவிட்டனர்.

இது குறித்து மரியதங்கம் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிவகாசி பகுதியில் கடந்த 2 வாரத்தில் 4 இடங்களில் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story