பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில், சர்வதேச யோகா தினம் கடைபிடிப்பு


பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில், சர்வதேச யோகா தினம் கடைபிடிப்பு
x
தினத்தந்தி 21 Jun 2019 11:47 PM GMT (Updated: 21 Jun 2019 11:47 PM GMT)

பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது.

பெரம்பலூர், 

சர்வதேச 5-வது யோகா தினம் நேற்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. அதன்படி பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் சர்வதேச யோகா தினத்தையொட்டி நேற்று யோகாசன செய்முறை பயிற்சிகள் நடந்தது. பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் யோகாசன செய்முறை பயிற்சி பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரராஜூ தலைமையில் நடந்தது. இதில் உடற்கல்வி ஆசிரியர்கள் மாணவ -மாணவிகளுக்கு பல்வேறு யோகாசனங்களையும், மூச்சுப்பயிற்சி, தியானப்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளையும் செய்து காண்பித்தனர். அதனை பின்தொடர்ந்து மாணவ- மாணவிகள் செய்தனர்.

இதேபோல் பெரம்பலூர் அரசினர் பெண்கள் உயர் நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. களரம்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல மேல் நிலைப்பள்ளியில் மாணவ- மாணவிகள் யோகா என்கிற ஆங்கில எழுத்து வடிவில் நின்று பல்வேறு யோகாசனங்களை செய்தனர்.

பெரம்பலூர், வேப்பூர் ஆகிய கல்வி மாவட்ட பாரத சாரண, சாரணியர்கள் சார்பில் யோகாசன செய்முறை பயிற்சி பெரம்பலூரில் உள்ள சாரணர்கள் பயிற்சி அரங்கத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அருளரங்கன் தலைமையில் நடந்தது. இதேபோல் பெரம்பலூரில் உள்ள மாவட்ட ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல் தலைமையில் போலீசார் பல்வேறு யோகாசனங்களை செய்தனர். அரியலூர் மாவட்ட ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் போலீசார் பல்வேறு யோகாசனங்களை செய்தனர். 

Next Story