அரசு கவிழ்ந்தால் நன்றாக இருக்கும்: கர்நாடகத்தில் மக்கள் நலனை கூட்டணி கட்சிகள் மறந்துவிட்டன மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி பேட்டி
கர்நாடகத்தில் மக்கள் நலனை கூட்டணி கட்சிகள் மறந்துவிட்டன என்று மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி கூறினார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் மக்கள் நலனை கூட்டணி கட்சிகள் மறந்துவிட்டன என்று மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி கூறினார்.
மத்திய நாடாளுமன்ற விவகாரம், நிலக்கரித்துறை மந்திரி பிரகலாத்ஜோஷி உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மக்களின் பிரச்சினைகள்
மாநில அரசை நடத்தி வரும் கூட்டணி கட்சிகள் ஒருவரையொருவர் காலை இழுத்துவிடுவதில் போட்டிபோட்டு செயல்படுகிறார்கள். அதிலும் முன்னாள் பிரதமர் தேவே கவுடா, முன்னாள் முதல்- மந்திரி சித்தராமையா ஆகியோர் கடும் கோபத்தில் மோதல் போக்குடன் செயல்படுகிறார்கள்.
இத்தகைய கூட்டணி அரசால் கர்நாடகத்திற்கு என்ன பயன். சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வரும் என்று தேவேகவுடா கூறியிருக்கிறார். இது, கூட்டணியில் எதுவும் சரியில்லை என்பது தெளிவாக எடுத்து காட்டு கிறது. இதன் காரணமாக மக்களின் பிரச்சினைகளை தீர்க்க யாரும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அரசு கவிழ்ந்தால் நன்றாக இருக்கும்.
சந்தேகத்தை கிளப்புகிறார்கள்
நல்லது செய்யவே மக்கள் ஓட்டுப்போட்டு எம்.எல்.ஏ.க்களை தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால் எம்.எல்.ஏ.க்கள், மந்திரி பதவி, வாரிய தலைவர் பதவியை பெறுவதில் போட்டி போட்டு செயல்படுகிறார்கள். மக்களின் நலனை கூட்டணி கட்சிகள் மறந்துவிட்டன.
இந்த கூட்டணி அரசு கவிழ்ந்தால், ஆட்சி அமைப்பது பற்றி பா.ஜனதா உரிய முடிவு எடுக்கும். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது. காங்கிரஸ் தலைவர்கள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது சந்தேகத்தை கிளப்புகிறார்கள். அவர்கள் மன நிலையை இழந்துவிட்டனர். அதனால் தான் இவ்வாறு பேசுகிறார்கள்.
தமிழ்நாடு
கேரளா, ஆந்திரா, தமிழ்நாட்டில் பா.ஜனதா வெற்றி பெறவில்லை. அங்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் இருக்கவில்லையா?.
இவ்வாறு பிரகலாத்ஜோஷி கூறினார்.
Related Tags :
Next Story