கெம்பேகவுடாவின் கொள்கைகள், புத்தக வடிவில் வர வேண்டும் மத்திய மந்திரி சதானந்தகவுடா பேச்சு
கெம்பேகவுடாவின் கொள்கைகள் புத்தக வடிவில் வர வேண்டும் என்று மத்திய மந்திரி சதானந்த கவுடா கூறினார்.
பெங்களூரு,
கெம்பேகவுடாவின் கொள்கைகள் புத்தக வடிவில் வர வேண்டும் என்று மத்திய மந்திரி சதானந்த கவுடா கூறினார்.
பதவி கிடைத்தது
கன்னட சாகித்ய பரிஷத் சார்பில் கெம்பேகவுடா ஜெயந்தி விழா நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. இதில் மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை மந்திரி சதானந்தகவுடா கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:-
நான் சுள்ளியா தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந் தேன். அப்போது எனது பெயர் சதானந்த் என்று இருந்தது. அதன் பிறகு ஆதரவாளர்கள் சிலர் எனது பெயருடன் கவுடா என்று சேர்க்குமாறு ஆலோசனை வழங்கினர். அந்த ஆலோசனையை ஏற்று நான் எனது பெயரை சதானந்தகவுடா என்று மாற்றினேன். பெயருடன் கவுடாவை சேர்த்ததால் முதல்-மந்திரி பதவி, மத்திய மந்திரி பதவி எனக்கு கிடைத்தது.
குடும்பத்தையே அர்ப்பணித்தார்
நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, அப்பையா சிலையை நிறுவினேன். பெங்களூருவை நிர்மாணித்தது கெம்பேகவுடா. 500 ஆண்டுகளுக்கு முன்பே அவர் தொலைநோக்கு பார்வையுடன் நகரை கட்டமைத்தார்.
கெம்பேகவுடாவின் எண்ணங்கள், கொள்கைகள் புத்தக வடிவில் வர வேண்டும். அவர் மக்களுக்காக தனது குடும்பத்தையே அர்ப்பணித்தார். கர்நாடகத்திற்கு குறிப்பாக பெங்களூருவின் வளர்ச்சியில் கவுடா சமூகத்தின் பங்களிப்பு அதிகம். பெங்களூரு விமான நிலையத்திற்கு கெம்பேகவுடா பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்த விமான நிலையத்தில் கெம்பேகவுடா சிலை அமைக்க நான் முயற்சி செய்வேன்.
இவ்வாறு சதானந்தகவுடா பேசினார்.
Related Tags :
Next Story