தூத்துக்குடி மாவட்டத்தில் உலக யோகா தின விழா
தூத்துக்குடி மாவட்டத்தில் உலக யோக தின விழா நடந்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் உலக யோக தின விழா நடந்தது.
தூத்துக்குடி
தூத்துக்குடி தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் உலக யோகா தின விழா நடந்தது. பள்ளி தாளாளர் பென்சிகர் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். வாழும்கலை பயிற்சிமைய ஆசிரியர் விஜயா மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு யோகாசன பயிற்சி அளித்தார்.
ஏரல்
ஏரல் அருகே நயினார்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த விழாவில் தலைமை ஆசிரியர் மாதவன் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் சன்னியாசிமுத்து முன்னிலை வகித்தார். மாணவர்கள் பல்வேறு யோகாசனங்களை செய்தனர். ஆசிரியர் துளசிமணி நன்றி கூறினார். ஏரல் லோபா மெட்ரிக் உயர்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி நிறுவனர் லோபா முருகன் தலைமை தாங்கினார். மாணவர்கள் பல்வேறு யோகாசனங்களை செய்து காண்பித்தனர். ஆசிரியை அபிராமி யோகா தினம் குறித்து பேசினார். ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் இம்மானுவேல், உடற்கல்வி ஆசிரியர் ஜானகிராமன் மற்றும் ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.
கயத்தாறு
கயத்தாறு அருகே உசிலங்குளம் பத்திரகாளி அம்மன் கோவில் முன்பு பா.ஜனதாவினர் யோகாசனம் செய்தனர். ஏற்பாடுகளை ஒன்றிய இளைஞர் அணி பொதுச்செயலாளர் பொன்னு செய்து இருந்தார்.
எட்டயபுரம் நடுவிற்பட்டியில் பா.ஜனதாவினர் பல்வேறு யோகாசனங்களை செய்தனர். மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் ஆத்திராஜ், நகர தலைவர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story