நாமக்கல்லில் மக்காச்சோள படைப்புழு விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடந்தது
நாமக்கல்லில் மக்காச்சோள படைப்புழு குறித்த விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடந்தது.
நாமக்கல்,
நாமக்கல் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகள் மற்றும் இடுபொருள் விற்பனையாளர்களுக்கான படைப்புழு தாக்குதல் மற்றும் கட்டுப்பாடு முறைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில் கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பயிர் பாதுகாப்பு இயக்குனரக இயக்குனர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் குத்துவிளக்கு ஏற்றி கூட்டத்தை தொடங்கிவைத்து கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் முக்கிய பயிராக விவசாயிகளால் பயிரிடப்பட்டு வரும் மக்காச்சோள பயிரில் தற்போது படைப்புழு தாக்குதல் தீவிரமாக உள்ளது. படைப்புழுக்கள் ஒரு சில நாட்களிலேயே மக்காச்சோள பயிரின் முக்கிய பகுதிகளை முழுமையாக சாப்பிடும் வல்லமை கொண்டது.
இந்த படைப்புழுக்களை கட்டுப்படுத்த தமிழக அரசு மிக தீவிரமான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தற்போது வேளாண்மை துறை அலுவலர்கள் மற்றும் வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர்கள் நேரடியாக விவசாயிகளை சந்தித்து ஆலோசனைகளையும், படைப்புழுக்களை கட்டுப்படுத்தும் முறைகளையும் விளக்கி கூறி வருகிறார்கள்.
அதன் அடிப்படையில் நமது மாவட்டத்தில் மக்காச்சோளம் அதிக அளவில் பயிரிடப்படுவதால் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படுகிறது. விவசாயிகள் நலனிற்காக நடத்தப்படும் கூட்டத்தில் தெரிவிக்கப்படும் தொழில்நுட்ப கருத்துக்களை விவசாயிகள் நன்குபுரிந்துகொண்டு படைப்புழு தாக்குதலில் இருந்து மக்காச்சோள பயிரினை பாதுகாத்து கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பூச்சியியல் துறை தலைவர் சாத்தையா, பேராசிரியர் முத்துகிருஷ்ணன், நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் முருகன் ஆகியோர் படைப்புழுவினை கட்டுப்படுத்தும் பல்வேறு வழிமுறைகள் குறித்து எடுத்து கூறினர்.
மேலும் மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகள் அனைவரும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் பங்குகொண்டு ஏக்கருக்கு ரூ.507 பிரிமீயத்தொகையை வருகிற ஆகஸ்டு மாதம் 31-ந் தேதிக்குள் செலுத்தி பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டது.
இதில் வேளாண்மை இணை இயக்குனர் சேகர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயலட்சுமி, வேளாண்மை துணை இயக்குனர் (உழவர் பயிற்சி நிலையம்) அசோகன், வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) கவிதா மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story