தனித்தனி சம்பவத்தில், பெண் உள்பட 2 பேர் விஷம் குடித்து தற்கொலை


தனித்தனி சம்பவத்தில், பெண் உள்பட 2 பேர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 23 Jun 2019 4:00 AM IST (Updated: 23 Jun 2019 2:44 AM IST)
t-max-icont-min-icon

தனித்தனி சம்பவத்தில் பெண் உள்பட 2 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

விழுப்புரம், 

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பரிக்கல் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகள் காமாட்சி(வயது 28). இவருக்கும் ஆமூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று சக்திவேலுக்கும், காமாட்சிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த காமாட்சி வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி காமாட்சி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(42). விவசாயி. இவருடைய மனைவி ராஜாங்கம். இவர்களுக்கு இதுவரை குழந்தை இல்லை. இதனால் ராதாகிருஷ்ணன் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று, ராதாகிருஷ்ணன் மதுவில் விஷத்தை கலந்து குடித்து விட்டார். மயங்கிய நிலையில் கிடந்த இவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராதாகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ராஜாங்கம் உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story