பஞ்சாலைகளில் வேலை பார்க்கும் ராமநாதபுரம் மாவட்ட குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு; குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் பரபரப்பு குற்றச்சாட்டு
வெளிமாவட்டங்களில் உள்ள பஞ்சாலைகளுக்கு வேலைக்கு அழைத்து செல்லப்படும் ராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள் பாலியல் தொல்லை பாதிப்புகளுக்கு உள்ளாகி உள்ளதாக ராமநாதபுரத்தில் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் பரபரப்பு குற்றசாட்டு கூறப்பட்டது.
ராமநாதபுரம்,
இந்தியாவிலேயே முதல் முறையாக ராமநாதபுரத்தில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் குழந்தைகள் பாதுகாப்புக்கான சிறப்பு அமர்வு நடைபெற்றது. இதில் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களை சேர்ந்த குழந்தைகள் மீதான குற்றங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சுமார் 215 புகார் மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் நடவடிக்கை எடுத்து அறிக்கை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த கூட்டத்தில் தென்மாவட்டங்களை சேர்ந்த அனைத்து தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பின் சார்பில் நிர்வாகி மன்னர் என்பவர் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் 13 முதல் 18 வயது உள்ள வளர் இளம் பெண்கள் தங்களுடைய குடும்ப வறுமை காரணமாக வயிற்றுப்பசியை போக்க, பெற்றோர்களின் கடன்களை அடைக்க பஞ்சாலை தொழிற்சாலைகளுக்கு பணிக்கு செல்கின்றனர்.
குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ஏராளமான குழந்தைகள் திருப்பூர், ஈரோடு, அவினாசி, கோயம்புத்தூர் பகுதிகளில் உள்ள பஞ்சாலைகளுக்கும், பனியன் கம்பெனிகளுக்கும் பணிக்கு செல்கின்றனர். அங்கு அவர்களுக்கு வேலைக்குரிய நியாயமான சம்பளம், முறையான ஓய்வு போன்றவை கிடைப்பது இல்லை. பல இடங்களில் ஏராளமான குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு உள்ளாகி வெளியில் சொன்னால் குடும்பத்திற்கு பாதிப்பு என்று அவதியடைந்து வருகின்றனர். இதுபோன்ற குழந்தைகளுக்கு போதிய பாதுகாப்பும், அரசின் விதிமுறைகளின்படி சலுகைகள், வசதிகள் வழங்கவும் இந்த ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட ஆணையத்தினர் பஞ்சாலைகளைநேரில் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

Related Tags :
Next Story