பாந்திரா-கலாநகர் இடையே உள்ள நடைபாதை மேம்பாலம் இடிக்கும் பணி தொடங்கியது


பாந்திரா-கலாநகர் இடையே உள்ள நடைபாதை மேம்பாலம் இடிக்கும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 23 Jun 2019 4:00 AM IST (Updated: 23 Jun 2019 3:29 AM IST)
t-max-icont-min-icon

பாந்திரா-கலாநகர் இடையே உள்ள நடைபாதை மேம்பாலம் இடிக்கும் பணி தொடங்கியது.

மும்பை,

பாந்திரா-கலாநகர் இடையே உள்ள நடைபாதை மேம்பாலம் இடிக்கும் பணி தொடங்கியது.

நடைபாதை மேம்பாலம்

மும்பை பாந்திரா கிழக்கு பகுதியில் இருந்து கலா நகர் இடையே நடைபாதை மேம்பாலம் உள்ளது. இது மும்பை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் கட்டப்பட்டதாகும். சமீபத்தில் இந்த பாலத்தில் ஆய்வு நடத்திய போது அது பலவீனமாக இருந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து பொதுமக்கள் நடைபாதை மேம்பாலத்தின் வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டது. நடை பாதை மேம்பாலத்தை இடித்துவிட்டு புதிதாக கட்ட முடிவு செய்யப்பட்டு இருந்தது.

இடிக்கும் பணி தொடங்கியது

இந்த நிலையில் நேற்று அந்த பாலத்தை இடிக்கும் பணி தொடங்கியது. இந்த பணி இன்று (ஞாயிற்றுக் கிழமை) வரை நடைபெற உள்ளது. இதுகுறித்து எம்.எம்.ஆர்.டி.ஏ அதிகாரி தெரிவிக்கையில், மேம்பாலத்தை இடிக்கும் பணி காலை 11 மணி அளவில் தொடங்கியது. பாலத்தை இடிக்கும் பணி நடைபெறும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அந்த பகுதியில் கூடுதலாக போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story