உத்திரமேரூர் அருகே துணைமின் நிலையம் திறப்பு அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த நீராடி என்னும் இடத்தில் ரூ.10 கோடி மதிப்பில் 33 கிலோவாட் திறன் கொண்ட புதிதாக அமைக்கப்பட்ட துணைமின் நிலையத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.
உத்திரமேரூர்,
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னிர்செல்வம், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பிரகாஷ் பாபு, தங்க பஞ்சசாரம், தர்மன், உத்திரமேரூர் நகர இளைஞரணி செயலாளர் துரைபாபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
உத்திரமேரூர் பேரூராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வாலாஜாபாத் பா.கணேசன் தலைமையில் நூற்றுக்கணக்கான அ.தி.மு.க.வினர் அங்கு திரண்டு பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.முன்னதாக மேற்பார்வை பொறியாளர் கிருஷ்ணகுமார், செயற்பொறியாளர் (பொறுப்பு) சிவராஜ், செயற்பொறியாளர் (பொது) எஸ்.எஸ். தீபசுந்தரி, உதவி செயற்பொறியாளர் ஏழுமலை, வசந்தி, வெங்கடேசன், வரத்தான் ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னிர்செல்வம், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பிரகாஷ் பாபு, தங்க பஞ்சசாரம், தர்மன், உத்திரமேரூர் நகர இளைஞரணி செயலாளர் துரைபாபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story