சேத்துப்பட்டு ஏரி தூர்வாரும் பணி தொடக்கம் ஒரு மாதத்தில் முடிக்க திட்டம்
அதிக அளவு தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் சேத்துப்பட்டு ஏரியை தூர்வாரும் பணி தொடங்கி உள்ளது. இந்த பணியை ஒரு மாதத்தில் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
சென்னை,
சென்னை சேத்துப்பட்டு ஏரியில் நிலத்தடி நீர் மட்டத்தை செறிவூட்டும் விதமாக 16 ஏக்கர் பரப்பளவில் மீன் வளத்துறைக்கு சொந்தமான சென்னை சேத்துப்பட்டு ஏரியில் ரூ.42 கோடியில் பசுமைப்பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு பொழுதுபோக்கு அம்சமாக தூண்டில் மீன் பிடிப்பு மற்றும் நடைபயிற்சி தளங்கள் போன்றவற்றை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திறந்துவைத்தார்.
மெரினா, எலியட்ஸ் கடற்கரைகள், கிண்டி சிறுவர் பூங்கா, பாம்பு பண்ணை, வண்டலூர் உயிரியல் பூங்கா வரிசையில் சென்னையின் மற்றொரு சுற்றுலாத்தலமாக சேத்துப்பட்டு பசுமைப்பூங்கா செயல்பட்டு வருகிறது. சேத்துப்பட்டு ஏரியை சுற்றி சுமார் 1.2 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில், பொதுமக்கள் நடை பயிற்சியிலும் ஈடுபடுகின்றனர். இயற்கையை சார்ந்த சுற்றுலாவை மையப்படுத்தி அமைக்கப்பட்டிருக்கும் இந்த பசுமைப்பூங்காவுக்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வந்தது.
மாநகரின் மத்திய பகுதியில் உள்ள கீழ்ப்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையம், சேத்துப்பட்டு ரெயில் நிலையம் என எளிதில் மக்கள் வந்து செல்லும் வகையில் இந்த பசுமைப்பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் சிரமம் இல்லாமல் இங்கு வந்து செல்கின்றனர். இந்த பசுமைப்பூங்காவில், பொதுமக்கள் தங்கள் உடல் நலத்தை பேணவும், ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் செலவிடவும் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
முக்கியமாக தூண்டில் மீன்பிடிப்பு, படகு சவாரி, ஊடக மையம், சிறுவர் விளையாட்டு பூங்கா, மகரந்தப்பூங்கா, 3-டி திரையரங்கு ஆகியவை உள்ளன. ஏரியில் உள்ள நாட்டுவகை மீன் இனங்களுடன், இந்திய பெருங்கெண்டை மீன்களான கட்லா, ரோகு, மிர்கால், பங்கேசியஸ் மீன் இனங்களும் வளர்க்கப்பட்டு வந்தன. இந்த பசுமைப்பூங்காவின் இயற்கை சூழலால் பூங்காவுக்கு வருகை புரியும் அரியவகைப் பறவைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து இருந்தன.
இந்த சூழ்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாகவே முறையான பருவமழை இல்லாததால் ஏரிக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. அத்துடன் வெப்பத்தின் அளவும் அதிகரித்து காணப்பட்டதால் ஏரியில் உள்ள தண்ணீரும் விரைவாக ஆவியாக தொடங்கியது. இதேபோன்று கடந்த ஆண்டும் தண்ணீர் குறைந்தது. லாரி தண்ணீர் மூலம் நிலைமையை ஓரளவு அதிகாரிகள் சமாளித்தனர்.
ஆனால் இந்த ஆண்டு ஏரி முற்றிலும் வறண்டுவிட்டது. இதனால் படகு சவாரி மற்றும் மீன்பிடிப்பது நிறுத்தப்பட்டன. ஏரிக்கு வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.
எனவே வரும் பருவ மழைக்கு முன்பாக ஏரியில் உள்ள களிமண் மற்றும் வண்டல் மண்ணை தூர்வாரி தயார்படுத்தி வைத்திருந்தால் தண்ணீர் அதிகளவு நிரம்ப வாய்ப்பு உள்ளது என்று அதிகாரிகள் திட்டமிட்டு தூர்வாரும் பணியில் இறங்கி உள்ளனர்.
இதுகுறித்து சேத்துப்பட்டு பசுமைப் பூங்கா நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது:-
‘விர்ச்சுவல்’ திரையரங்கு கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து செயல்பட்டு வருகிறது. இந்த திரையரங்கில் சாப்ட்வேர் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. இத்திரையரங்கில் காடுகளில் நடக்கும் நிகழ்வுகள் காட்சிகளாக காட்டப்படும். இது பொதுமக்கள் காட்டின் நடுப்பகுதியில் நின்று பார்ப்பதை போன்ற மகிழ்வை தரும். தற்போதுள்ள 3-டி திரையரங்கில் டைனோசர் மற்றும் காடு சம்பந்தமான படக்காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது.
சேத்துப்பட்டு ஏரி தற்போது வறண்டுவிட்டதால் தூர்வார திட்டமிட்டு பணியில் இறங்கி உள்ளோம். ஏரியின் உட்பகுதியில் உள்ள களிமண் மற்றும் வண்டல் மண்ணை எடுத்து கரையை மேலும் பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இதன் மூலம் கடந்த சில ஆண்டுகளாக திட்டமிடப்பட்ட தூர்வாரும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகள் அதிகரித்து இருப்பதுடன், பருவ மழைக்காலங்களில் தண்ணீரை நிரப்பும் வசதியும் ஏற்படுத்த முடியும் என்பதால் தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இந்தப்பணி இன்னும் ஒரு மாதத்திற்குள் முடிவடையும். இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Related Tags :
Next Story