மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்து: சுங்கத்துறை ஊழியர், மனைவி, மகளுடன் பலி + "||" + Car collision on motorcycle: Customs employee, wife, daughter killed

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்து: சுங்கத்துறை ஊழியர், மனைவி, மகளுடன் பலி

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்து: சுங்கத்துறை ஊழியர், மனைவி, மகளுடன் பலி
திருச்சியில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் சுங்கத்துறை ஊழியர், மனைவி, மகளுடன் பலியானார். அவருடைய மகன் பஸ்சில் சென்றதால் உயிர்தப்பினான்.
திருவெறும்பூர்,

திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள கஸ்டம்ஸ் குடியிருப்பை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(வயது 45). இவர் சுங்கத்துறையில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி வினிதா(34). இவர்களின் மகன் ராகுல்(13). மகள் ராஜஸ்ரீ(8). இவர்கள் இருவரும் கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தனர்.


இந்த நிலையில் நவல்பட்டு பூலாங்குடி பகுதியில் உள்ள தனது அண்ணன் மனோகரன் வீட்டுக்கு நேற்று ராமச்சந்திரன் தனது குடும்பத்துடன் சென்றார். நிகழ்ச்சி முடிந்ததும், மாலையில் தனது மகன் ராகுலை மட்டும் அவர் பஸ்சில் ஏற்றி வீட்டுக்கு செல்லும்படி அனுப்பினார். பின்னர் தனது மனைவி மற்றும் மகளை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அவர் வீட்டுக்கு புறப்பட்டார்.

திருவெறும்பூர் அடுத்த துப்பாக்கி தொழிற்சாலை அருகே கும்பக்குடி பிரிவு சாலையில் இருந்து புதுக்கோட்டை சாலைக்கு சென்றனர். அப்போது, அந்த வழியாக புதுக்கோட்டையில் இருந்து வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ராமச்சந்திரனின் மோட்டார் சைக்கிள் மீது மோதி, சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி நின்றது.

இதில் மோட்டார் சைக்கி ளில் வந்த ராமச்சந்திரன், அவருடைய மனைவி வினிதா, மகள் ராஜஸ்ரீ ஆகிய 3 பேரும் தூக்கிவீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் கார் மோதியதால் மின்கம்பமும் முறிந்தது. இதுபற்றி தகவல் அறிந்த நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

பின்னர் விபத்தில் பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக் காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பிவைத்தனர். ராமச்சந்திரனின் மகன் ராகுல் பஸ்சில் சென்றதால் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினான்.

மேலும் இந்த விபத்து குறித்து நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சுங்கத்துறை அதிகாரி மனைவி, மகளுடன் சாலை விபத்தில் பலியான சம்பவம் கண்டோன்மெண்ட் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. குளித்தலை அருகே கார் மோதி தொழிலாளி பலி பெண் உள்பட 2 பேர் படுகாயம்
குளித்தலை அருகே கார் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதில் பெண் உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.
2. கன்னியாகுமரியில் பேரூராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீவிபத்து சுற்றுலா பயணிகள் அவதி
கன்னியாகுமரியில் பேரூராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டதால் சூரியன் மறையும் காட்சியை காணச் சென்ற சுற்றுலா பயணிகள் பெரும் அவதி அடைந்தனர்.
3. மும்பையில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து 55 பேர் உயிரோடு புதைந்தனர் - 11 பேரின் உடல்கள் மீட்பு
மும்பை டோங்கிரியில் 4 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்த விபத்தில் 55 பேர் உயிரோடு புதைந்தனர். இதில் 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.
4. கோவில்பட்டி அருகே சாலை விபத்து; 3 பேர் பலி
கோவில்பட்டி அருகே சாலை விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ளனர்.
5. புதுக்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதி
புதுக்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் இருந்து வரும் புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.