கடன் வாங்கி தருவதாக கூறி லாட்ஜில் வைத்து பெண்ணை கற்பழிக்க முயற்சி; 3 பேர் கைது
கடன்வாங்கி தருவதாக கூறி லாட்ஜில் வைத்து பெண்ணை கற்பழிக்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திசையன்விளை,
கடன்வாங்கி தருவதாக கூறி லாட்ஜில் வைத்து பெண்ணை கற்பழிக்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
கடன் கேட்டு வந்த பெண்
நெல்லை மாவட்டம் திசையன்விளை புளியடி தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 63). இவரிடம் தூத்துக்குடிபகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு பணம் தேவைப்படுவதாகவும், யாரிடமாவது கடனாக பணம் வாங்கித்தரும்படியும் கேட்டுள்ளார். அதற்கு கணேசன் பணம் வாங்கித்தருவதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் கணேசன் பணத்தை பெற்றுக் கொள்ள வரும்படி அந்த பெண்ைண அழைத்துள்ளார். அந்த பெண்ணை அழைத்து வந்து திசையன்விளை-இடையன்குடியில் உள்ள லாட்ஜில் தங்க வைத்தார். பின்னர் கணேசன் தனது நண்பர்களான திசையன்விளை மன்னர்ராஜா கோவில் தெருவைச் சேர்ந்த மார்டின் சுதாகர் (26), முஸ்லிம் வடக்கு தெருவைச் சேர்ந்த முகமது யாசர் அராபத் (30) ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார்.
3 பேர் கைது
பின்னர்3 பேரும் லாட்ஜிக்கு சென்று அந்த பெண்ணைகற்பழிக்கமுயன்றதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண் அவர்களிடம் இருந்து தப்பித்து வந்து திசையன்விளை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் வழக்குப்பதிவு செய்து கணேசன், மார்டின் சுதாகர், முகமது யாசர் அராபத் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story