தண்ணீர் வரத்து அதிகரிப்பு: குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்


தண்ணீர் வரத்து அதிகரிப்பு: குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
x
தினத்தந்தி 24 Jun 2019 3:45 AM IST (Updated: 24 Jun 2019 12:03 AM IST)
t-max-icont-min-icon

குற்றாலம் அருவிகளில் நேற்று தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

தென்காசி, 

குற்றாலம் அருவிகளில் நேற்று தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

தண்ணீர் வரத்து அதிகரிப்பு

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய 3 மாதங்கள் சீசன் காலங்கள் ஆகும். இதில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். சீசனை அனுபவிப்பதற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். ஆனால் சீசன் இந்த மாதம் இன்னும் சரிவர தொடங்கவில்லை. முதல் வாரத்தில் ஓரிரு நாட்களில் மட்டுமே தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. அதன் பின்னர் சீசன் மிகவும் மந்தமாகவே காணப்படுகிறது.

கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் குற்றாலம் அருவிகளில் ஓரளவுக்கு தண்ணீர் கொட்டுகிறது. நேற்று குற்றாலத்தில் வெயிலே இல்லை. சாரல் மழை விட்டு விட்டு தூறிக் கொண்டே இருந்தது. குளிர்்ந்த காற்று வீசியது. மெயி்ன் அருவி, ஐந்தருவிகளில் நேற்று தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து காணப்பட்டது.

ஆனந்த குளியல்

மற்ற நாட்களை விட விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது. அவர்கள் மெயின் அருவி, ஐந்தருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

Next Story