தூத்துக்குடியில் விழிப்புணர்வு ஊர்வலத்துக்கு வந்த பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச காலணி கலெக்டர் சந்தீப் நந்தூரியின் மனிதாபிமானம்
தூத்துக்குடியில் உலக உணவு பாதுகாப்பு தின விழிப்புணர்வு ஊர்வலத்துக்கு வந்த பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக காலணிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் உலக உணவு பாதுகாப்பு தின விழிப்புணர்வு ஊர்வலத்துக்கு வந்த பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக காலணிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.
பேரணி
தூத்துக்குடி சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த வாரம் உலக உணவு பாதுகாப்பு தின ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை தொடங்கி வைப்பதற்காக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வந்தார். அப்போது, ஊர்வலத்தில் செல்வதற்காக பல்வேறு பள்ளிக்கூடங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் பள்ளி வளாகத்தில் தயாராக நின்றனர். அப்போது அங்கு நின்ற சில மாணவ-மாணவிகள் காலில் காலணி இல்லாமல் நின்று கொண்டு இருந்தனர்.
இதனை கவனித்த கலெக்டர் சந்தீப் நந்தூரி, காலணி இல்லாத மாணவ-மாணவிகளை தனியாக அழைத்து செல்ல அறிவுறுத்தினார். அதன்பேரில் ஊர்வலத்தில் செல்வதற்காக நின்று கொண்டு இருந்த 13 மாணவ-மாணவிகள் அங்கு இருந்து தனியாக அழைத்து செல்லப்பட்டனர். அவர்களிடம் விசாரித்த போது, அவர்களிடம் காலணிகள் இல்லை என்பது தெரியவந்தது. உடனடியாக அவர்களின் காலணி அளவை பெற கலெக்டர் உத்தரவிட்டார்.
காலணி
இதைத் தொடர்ந்து நன்கொடையாளர்கள் மூலம் காலணிகள் பெறுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பெறப்பட்ட காலணிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி 13 மாணவ-மாணவிகளையும் கலெக்டர் அலுவலகத்துக்கு வரவழைத்து காலணிகளை வழங்கினார். காலணிகளை பெற்றுக் கொண்ட மாணவ-மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story