கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் செய்ய முயற்சி: இந்து முன்னணியினர் 21 பேர் கைது

கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் செய்ய முயற்சி: இந்து முன்னணியினர் 21 பேர் கைது
x
தினத்தந்தி 24 Jun 2019 3:30 AM IST (Updated: 24 Jun 2019 12:36 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் இந்து சாம்ராஜ்ய தினத்தை முன்னிட்டு மோட்டார் சைக்கிள் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற இந்து முன்னணியினர் 21 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் இந்து சாம்ராஜ்ய தினத்தை முன்னிட்டு மோட்டார் சைக்கிள் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற இந்து முன்னணியினர் 21 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்து சாம்ராஜ்ய தினம்

கோவில்பட்டி இந்து முன்னணி சார்பில் இந்து சாம்ராஜ்ய தினத்தை முன்னிட்டு இனாம்மணியாச்சி சந்திப்பில் இருந்து மோட்டார் சைக்கிள் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டு, அங்கு பலர் கூடினார்கள். இதுகுறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் இந்து முன்னணியினரிடம் உங்களுக்கு அனுமதி அளிக்கபடவில்லை.

ஆர்ப்பாட்டம்

எனவே மோட்டார் சைக்கிள் பேரணி நடத்த கூடாது என்று கூறினர்.

பேரணி நடத்த அனுமதிக்கவில்லை என்றால் நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று கூறி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்துக்கு முயன்றனர்.

21 பேர் கைது

இதனையடுத்து போலீசார் ஆர்ப்பாட்டத்துக்கு முயன்ற இந்து முன்னணி நகர தலைவர் சீனிவாசன், நகர செயலாளர் வடிவேல், பொதுச்செயலாளர் சுதாகர், நகர துணை தலைவர் வாசு உள்பட 21 பேரை கைது செய்தனர். அவர்கள் அங்கு உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

Next Story