புதுக்கோட்டை அருகே ஓடையில் மணல் அள்ளிய 4 பேர் கைது லாரிகள் பறிமுதல்
புதுக்கோட்டை அருகே ஓடையில் மணல் அள்ளிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
தூத்துக்குடி,
புதுக்கோட்டை அருகே ஓடையில் மணல் அள்ளிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
லாரிகளில் மணல்...
தூத்துக்குடி மண்டல துணை தாசில்தார் பிரபாகரன் தலைமையிலான அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, மங்களகிரி விலக்கு பகுதியில் உள்ள ஓடைப்பகுதியில் 3பேர் லாரிகளில் மணல் அள்ளிக் கொண்டு இருந்தனர். உடனடியாக அதிகாரிகள் விரைந்து சென்று அந்த 3 லாரிகளை மடக்கி பிடித்து பறிமுதல் செய்தனர். தொடர்ந்து லாரி டிரைவர்கள் ஜெபக்குமார்(வயது 23), சுப்பையா(41), நடராஜன்(51) ஆகியோரையும், மணல் மற்றும் 3 லாரிகளையும் போலீசில் ஒப்படைத்தனர்.
4 பேர் கைது
இதே போன்று கூட்டாம்புளி-குலையன்கரிசல் ரோடு அருகே ஓடைப்பகுதியில் மணல் அள்ளிக் கொண்டு இருந்த அந்தோணி பாலசேகர்(36) என்பவரை அதிகாரிகள் மடக்கி பிடித்து லாரியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்தோணி பாலசேகரை போலீசில் ஒப்படைத்தனர்.
அதன்பேரில் புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலை வழக்கு பதிவு செய்து அந்த 4 பேரையும் கைது செய்தார்.
Related Tags :
Next Story