நகராட்சி குப்பை கிடங்கில் தீ: நாகூர் வெட்டாற்றில் புகைமூட்டதால் மக்கள் அவதி
நாகூர் வெட்டாற்று பகுதியில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் எரியும் தீயால் புகைமூட்டமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
நாகூர்,
நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு நாள்தோறும் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் நாகூர் முழுவதும் நாள்தோறும் 5 டன்னுக்கு மேல் குப்பைகள் குவிகின்றன. இப்பகுதியில் 10 வார்டுகள் உள்ளன. இங்கு 1 லட்சத்திற்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குடியிருப்புகள் மற்றும் தங்கும் விடுதிகளில் குவியும் குப்பைகளை நகராட்சி வாகனங்களில் துப்பரவு பணியாளர்கள் சென்று சேகரித்து வருகின்றனர். அப்போது மக்கும் அல்லது மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாகூரில் சேகரிக்கப்படும் குப்பைகள் வெட்டாற்று பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. ஆற்றை ஒட்டி அமைந்துள்ள இந்த குப்பை கிடங்கில் கெட்டுப்போன உணவுகள், பழங்கள், இறைச்சி கழிவுகள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட குப்பைகள் மொத்தமாக குவிந்து கிடக்கிறது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக குப்பை கிடங்கில் குப்பைகள் அதிகளவில் குவிந்து கிடப்பதால் குப்பைகளுக்கு பகல் நேரங்களில் தீ வைத்து விடுகின்றனர். இந்த தீயினால் அந்தபகுதி முழுவதும் ஒரே புகைமூட்டமாக காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள், துப்புரவு பணியாளர்கள் மூச்சுத்திணறலால் அவதியடைந்து வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, சுற்றுச்சூழல் மாசுபடும் நிலை உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நகராட்சி குப்பை கிடங்கில் எரியும் தீயை அணைத்து, குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story