அரூரில் விபத்து தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்


அரூரில் விபத்து தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
x
தினத்தந்தி 24 Jun 2019 4:00 AM IST (Updated: 24 Jun 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு அரூரை தலைமையிடமாக கொண்டு வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

அரூர்,

அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு அரூரை தலைமையிடமாக கொண்டு வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் டிரைவர் உரிமத்துக்கு விண்ணப்பித்து பெற்றுச் செல்கின்றனர். இந்நிலையில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விபத்து தடுப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில், காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் போடுவது அவசியம். இரண்டு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது மற்றும் புதிதாக லைசன்ஸ் பெறுபவர்கள் சாலையில் அமைந்துள்ள சிக்னலை புரிந்து அதற்கு தகுந்தாற்போல் வாகனத்தை ஓட்ட வேண்டும். சாலையில் தன்மைக்கு தகுந்தாற்போல் வாகனத்தின் வேகத்தை குறைத்து மற்றும் உயர்த்தியும் வாகனத்தை எப்படி ஓட்ட வேண்டும் என விளக்கப்பட்டது. மேலும் சாலையில் எதுபோன்ற கவனக்குறைவுகளால் விபத்துக்கள் ஏற்படுகிறது என்பதை வெள்ளித்திரையில் காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story