மாவட்ட செய்திகள்

சேலம் மாவட்டத்தில் மருந்துகள் ஆய்வாளர் பணிக்கு எழுத்து தேர்வு; 505 பேர் எழுதினர் + "||" + Writing Examination for Drugs Analyst's Work in Salem District; 505 were written

சேலம் மாவட்டத்தில் மருந்துகள் ஆய்வாளர் பணிக்கு எழுத்து தேர்வு; 505 பேர் எழுதினர்

சேலம் மாவட்டத்தில் மருந்துகள் ஆய்வாளர் பணிக்கு எழுத்து தேர்வு; 505 பேர் எழுதினர்
சேலம் மாவட்டத்தில் மருந்துகள் ஆய்வாளர் பணிக்கு எழுத்து தேர்வு; 505 பேர் எழுதினர் கலெக்டர் ரோகிணி ஆய்வு.
சேலம்,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் மருந்துகள் ஆய்வாளர் மற்றும் மருந்துகள் சோதனை மையத்தில் இளநிலை ஆய்வாளர் ஆகிய பணிகளுக்கான போட்டி தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது.

சேலம் மாவட்டத்தில் இந்த தேர்வை 663 பேர் எழுதுவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தனர். சேலம் அரசு கலைக்கல்லூரி மையத்தில் நடந்த இந்த தேர்வை மொத்தம் 505 பேர் கலந்து கொண்டு எழுதினர். 158 பேர் தேர்வு எழுதவரவில்லை. காலை 9.30 மணிக்கு தேர்வர்கள் அனைவரும் தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் எதுவும் உள்ளே எடுத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை.


காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை முதள் தாளும், மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை இரண்டாம் தாளும் என 2 கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்பட்டது.

இத்தேர்வு வீடியோ கேமரா மூலம் பதிவு செய்து கண்காணிக்கப்பட்டது. மேலும், கண்காணிப்பு பணியில் வருவாய்த்துறை அலுவலர்கள், பறக்கும் படை அலுவலர்கள் உள்ளிட்ட குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டது.

சேலம் அரசு கலைக்கல்லூரியில் நடந்த தேர்வினை மாவட்ட கலெக்டர் ரோகிணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, தேர்வில் எவ்வித முறைகேடுகள் நடக்காமல் சிறைப்பான முறையில் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் ரோகிணி கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, தாசில்தார் மாதேஸ்வரன், வருவாய் ஆய்வாளர் சேகர், கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...