விலை உயர்ந்த செல்போன் தொலைந்ததால் நண்பர்களுடன் சேர்ந்து ஏ.டி.எம். மையத்தில் பேட்டரிகளை திருடினோம்; கைதான 3 பேர் போலீசில் வாக்குமூலம்
விலை உயர்ந்த செல்போன் தொலைந்ததால் நண்பர்களுடன் சேர்ந்துஏ.டி.எம். மையத்தில்பேட்டரிகளை திருடினோம்என்று கைதான 3 பேரும் போலீசில் வாக்கு மூலம் அளித்துள்ளனர்.
கோவை,
கோவைமாநகர பகுதியில்திருட்டு, வழிப்பறி உள்பட குற்றச்சம்பவங்கள்நடப்பதை தடுக்க போலீசார்ரோந்து பணியில்ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக இரவு, அதிகாலை நேரத்தில்தீவிரமாக கண்காணிக்கப்பட்டுவருகிறது.
இந்த நிலையில் கோவைவெரைட்டிஹால்ரோடுபோலீஸ்நிலைய சிறப்புசப்- இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் தலைமையில் நேற்றுமுன்தினம் அதிகாலையில் போலீசார் ரோந்து சென்றனர்.
கோவைஒப்பணக்காரவீதி வழியாக அவர்கள் சென்றபோது அங்குள்ள ஒருஏ.டி.எம். மையத்துக்குள் இருந்து 4பேர் பேட்டரிகளுடன்வெளியே வந்தனர். அவர்கள்போலீசாரை பார்த்ததும்அங்கிருந்து தப்பி ஓடினார்கள்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களைதுரத்திச்சென்றுபிடித்தனர். அதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்ற 3பேரை பிடித்து போலீஸ்நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள்.
அதில் அவர்கள்மதுக்கரையைசேர்ந்த அஸ்லாம் (வயது 22),ரத்தினபுரியை சேர்ந்தபரத் (19),கணபதியை சேர்ந்தஹேமச்சந்திரன் (19) என்பதும்,ஏ.டி.எம். மையத்தில் உள்ளயூ.பி.எஸ்.சில்உள்ள 6பேட்டரிகளை திருடியதும்தெரியவந்தது. அவற்றின் மதிப்புரூ.60 ஆயிரம் ஆகும்.
இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவைமத்திய சிறையில்அடைத்தனர். அவர்கள் 3 பேரும் அளித்த வாக்கு மூலம்குறித்து போலீசார்கூறியதாவது:-
ஹேமச்சந்திரனும், பரத்தும் கோவையில் உள்ள ஒருதனியார் கல்லூரியில்2-ம்ஆண்டு படித்துவருகிறார்கள். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஹேமச்சந்திரனுக்கு அவருடைய பெற்றோர் விலை உயர்ந்த செல்போனைவாங்கி கொடுத்தனர்.அந்த செல்போனைகடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அவர் தொலைத்துவிட்டார்.
செல்போன்தொலைந்தது பெற்றோருக்கு தெரிந்தால்அவர்கள் திட்டுவார்கள் என்பதால் என்ன செய்வது என்று ஹேமச்சந்திரன் தனது நண்பர் பரத்திடம் கேட்டார். அதற்கு அவர் நண்பர்களுடன் சேர்ந்துஏ.டி.எம். மையங்களில் இருக்கும்பேட்டரிகளை திருடிவிற்றுவேறு செல்போன்வாங்கலாம் என்று ஆலோசனை கூறினார்.
இதையடுத்து அஸ்லாம், பரத், ஹேமச்சந்திரன், மற்றும் அஸ்லாமின் நண்பரான உக்கடம்ஜி.எம்.நகரை சேர்ந்தரோஷன் (24)ஆகியோர் சேர்ந்துநேற்று முன்தினம்ஒப்பணக்காரவீதியில் இருக்கும்ஏ.டி.எம்.மையத்துக்கு சென்றுஉள்ளனர்.
பின்னர் அவர்கள் அங்குள்ளகண்காணிப்பு கேமராவின்இணைப்பை துண்டித்துவிட்டுஅங்கிருக்கும்யூ.பி.எஸ்.சில்உள்ள 6பேட்டரிகளை திருடினார்கள். பிறகுஏ.டி.எம். மையத்தை விட்டு வெளியே வந்தபோது போலீசில் சிக்கிவிட்டதாக வாக்குமூலத்தில்கூறியதாக போலீசார்தெரிவித்தனர்.
மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும்ரோஷனை போலீசார்வலைவீசி தேடிவருகிறார்கள்.
Related Tags :
Next Story